மேலும் அறிய

பொதுத் தேர்வின்போது மொபைல் பயன்படுத்திக்கொள்ள அனுமதி; யாருக்கெல்லாம்? எதற்கு?

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கிய அறிவிப்பு! முதன்மை கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு! தவறினால் சிக்கல்!

ஏதேனும் அவசரத் தேவைகள் இருப்பின் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் மட்டும் தனது அலைபேசியைப் பயன்படுத்திட அனுமதி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தேர்வர்களின் வருகைப் பதிவு விவரத்தினை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

வருகை புரியாதோர் விவரம்

தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் வருகை புரியாதோர் (Absentees Entry) / மொழிப்பாட விலக்குப் பெற்றோர் (Language Exemption) போன்ற விவரங்களை பிற்பகல் 02.30 மணிக்குள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password ஐ பயன்படுத்தி தவறாது பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.

அனைத்து தேர்வர்களும் தேர்வெழுத வருகை புரிந்திருப்பின் All Present என்பதை Click செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், தேர்வு மையத்தில் பணிபுரியும் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், அறைக் கண்காணிப்பாளர், நிலையான படை உறுப்பினர், எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் அனைத்து நிலை தேர்வு மையப் பணியாளர்களின் முதன்மைக் கல்வி அலுவலரால் கையொப்பமிட்டு வழங்கப்பட்ட நியமன ஆணையினை ஆய்வு அலுவலர் கேட்கும்போது சமர்ப்பிக்கவேண்டும்.

தனி அலமாரி பயன்படுத்தக்கூடாது

தேர்வு மையத்தில் பணிபுரியும் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர். அறைக் கண்காணிப்பாளர், நிலையான படை உறுப்பினர், எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் அனைத்து நிலை தேர்வு மையப் பணியாளர்களிடம் பெறப்பட்ட கைப்பேசிகளை வினாத்தாள் வைக்கப்படும் அலமாரியிலேயே வைத்து பூட்டி சீல் வைக்க வேண்டும். இதற்கென தனி அலமாரி பயன்படுத்தக்கூடாது. இப்பணியினை அறைக் கண்காணிப்பாளர் அறிவுரைக் கூட்டம் மற்றும் அறை ஒதுக்கீடு (RooM allotment) முடிக்கும் முன்பே அதாவது Control Room-ல் அனைத்துப் பணியாளர் வருகை புரிந்தவுடன் முடிக்கப்பட வேண்டும்.

அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தேர்வு நாள் அன்றைய தேர்வர்கள் வருகை அறிக்கையினை (Present/ Absent Report) தேர்வு முடிவுற்ற பின்னர், பிற்பகல் 01.30 மணிக்கு மேல் உதவி இயக்குநர் வினாத்தாள் கட்டுக்காப்பாளரிடம் தெரிவித்தால் போதுமானது தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கண்காணிப்பாளர் மட்டும் அலைபேசி பயன்படுத்தலாம்

மேலும், தேர்வு நேரத்தில் தேர்வு நடத்துதல் தொடர்பாக ஏதேனும் அவசரத் தேவைகள் இருப்பின் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் மட்டும் தனது அலைபேசியைப் பயன்படுத்திட அனுமதி வழங்கப்படுகிறது.

தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வறைகளில் CCTV கேமராக்கள் உள்ள மையங்களில் கேமராக்களை ஆய்வு செய்து (வீடியோவினை பார்வையிட்டு) முதன்மைக் கண்காணிப்பாளர்கள் விரிவான அறிக்கை அளித்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

கலைஞர் பெயரில் Ph.D ஆராய்ச்சி உதவித்தொகை.. லண்டன் பல்கலை.,யில் சபரீசன் தொடங்கிய சூப்பர் திட்டம்!
கலைஞர் பெயரில் Ph.D ஆராய்ச்சி உதவித்தொகை.. லண்டன் பல்கலை.,யில் சபரீசன் தொடங்கிய சூப்பர் திட்டம்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Education Department: 6 முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
School Education Department: 6 முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget