மேலும் அறிய

Teachers Strike: இன்று முதல் எமிஸ் பணிகளில் ஈடுபடப்போவதில்லை: தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

Primary School Teachers Strike: இன்று முதல் எமிஸ் செயலியில் வருகைப் பதிவேடு தவிர வேறு பணிகளை செய்யப்போவதில்லை என்று தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்‌ இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது. 

இன்று முதல் எமிஸ் செயலியில் வருகைப் பதிவேடு தவிர வேறு பணிகளை செய்யப்போவதில்லை என்று டிட்டோஜேக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்‌ இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது. 

டிட்டோஜேக்‌ பேரமைப்பின்‌ மாநில உயர்மட்டக் குழு கூட்டம்‌ அண்மையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்‌ சங்கத்தின்‌ பொதுச் செயலாளர்‌ சேகர்‌ தலைமை ஏற்றார்‌. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் 1

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியா்‌ இயக்கங்களின்‌ கூட்டு நடவடிக்கைக்‌ குழு டிட்டோஜேக்‌ 30 அம்சக்‌ கோரிக்கைளை வலியறுத்தி 13.10.2023 அன்று சென்னையில்‌ டி.பி.ஐ. வளாகத்தில்‌ மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்‌ நடத்திட முடிவு செய்து அதற்குரிய பணிகளை மேற்கொண்டது. இந்நிலையில்‌ 11.10.2023 அன்று பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர்‌ ஆகியோர்‌ டிட்டோஜேக்‌ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்து பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ கோரிக்கைகள்‌ குறித்துப்‌ பேச்சுவார்த்தை நடத்தினர்‌. 

அதன்‌ தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்‌ தலைமையில்‌ பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ சென்னையில்‌ 12.10.2023 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின்‌ முகாம்‌ அலுவலகத்தில்‌ டிட்டோஜேக்‌ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன்‌ பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்பேச்சுவார்த்தையில்‌ 30 அம்சக் கோரிக்கைகளில்‌ 12 கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதிமாழி அளிக்கப்பட்டது. அதன்‌ அடிப்படையில்‌ நல்லெண்ண நடவடிக்கையாக 13.10.2023 அன்று நடைபெறுவதாக இருந்த கவன ஈாப்பு ஆர்ப்பாட்டத்தைப்‌ பேச்சுவார்த்தை விளக்கக்‌ கூட்டமாக நடத்திட டிட்டோஜேக்‌ மாநில உயர்மட்டக்குழு முடிவு செய்தது.

அதன்படி 13.10.2023 அன்று காலை 11.00 மணிக்கு எழும்பூர்‌ ராஜரத்தினம்‌ ஸ்டேடியம்‌ அருகில்‌ டிட்டோஜேக் சார்பில்‌ நடைபெற்ற பேச்சுவார்த்தை விளக்கக்‌ கூட்டத்தில்‌ பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர்‌‌ ஆகிய இருவரும்‌ கலந்துகொண்டு பேச்சுவார்த்தையில்‌ ஏற்பு செய்யப்பட்ட கோரிக்கைகள்‌ தொடர்பாக உறுதிமொழி அளித்தனர்‌. இந்நிகழ்வானது தமிழ்நாடு முழுவதும்‌ தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள்‌ மத்தியில்‌ நம்பிக்கையை ஏற்படுத்தியது.

எனவே இனியும்‌ தாமதிக்காமல்‌ பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில்‌ ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகள்‌ தொடர்பான உத்தரவுகளையும்‌ விரைந்து வழங்கிட டிட்டோஜேக்‌ மாநில அமைப்பு வலியுறுத்திக்‌ கேட்டுக்‌காள்கிறது.

தீர்மானம்‌  2

டிட்டோஜேக்‌ பேரமைப்பு சார்பில்‌ 16.10.2023 முதல்‌ ஆசிரியர்‌ வருகைப்பதிவு, மாணவர் வருகைப்பதிவு ஆகிய பதிவேற்றங்கள்‌ தவிர கற்பித்தல்‌ பணியினைப்‌ பாதிக்கும்‌ பிற எவ்விதப்‌ பதிவேற்றங்களையும்‌ எமிஸ் இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்வதில்லை என முடிவு செய்து அறிவித்திருந்தோம்‌. இந்நிலையில்‌ 11.10.2023 அன்று பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர்‌ ஆகியோர்‌ முன்னியில்‌ நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும்‌, அதன்‌ பின்னர்‌ 12.10.2023 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்‌ தலைமையில்‌ நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும்‌ 01.11.2023 முதல்‌ ஆசிரியர்கள்‌ எமிஸ் இணையதளப்‌ பதிவேற்றும்‌ பணிகளில்‌ இருந்து விடுவிக்கப்படுவார்கள்‌ என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால்‌ இன்றுவரை அதற்கான ஆணை எதுவும்‌ பிறப்பிக்கப்படவில்லை.

எனவே பேச்சுவார்த்தையில் உறுதி அளிக்கப்பட்டபடி நவம்பர் 1 முதல் ஆசிரியர்‌, மாணவர்‌ வருகைப்பதிவு தவிர கற்பித்தல்‌ பணியினைப்‌ பாதிக்கும்‌ பிற பதிவேற்றப்‌ பணிகளையும்‌ மேற்கொள்ளாமல்‌ தங்களை விடுவித்துக் கொள்வது எனவும்‌, எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டத்தில்‌ மாணவர்‌ மதிப்பீடு, தேர்வு உள்ளிட்ட இணையவழிப்‌ பதிவேற்றங்களை மேற்‌கொள்வதில்லை எனவும்‌ டிட்டோஜேக் பேரமைப்பு ஒருமனதாக முடிவுசெய்து அறிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Embed widget