பள்ளிச் சொத்துகளை மாணவர்கள் சேதப்படுத்தினால்... பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை!
பள்ளிகளில் மாணவர்களால் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டால் அதற்கு, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களே முழுப் பொறுப்பு என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் மாணவர்களால் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டால் அதற்கு, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களே முழுப் பொறுப்பு என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சேதமடைந்த பொருளை பெற்றோர்களோ அல்லது பாதுகாவலரோதான் மாற்றித் தரவேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான செயல்களில் குழந்தைகள் ஈடுபட்டால், முதலில் அவர்களுக்கு தக்க அலோசனை வழங்க வேண்டும். அடுத்தடுத்து தவறான செயல்களில் ஈடுபடும் குழந்தைகளை நல்வழிப்படுத்த ஒழுங்கு முறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாலலாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையம் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட வழிகாட்டல் நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி, அதனை அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப பரிந்துரைத்தது. மேலும், மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையம் பரிந்திரைத்துள்ள வழிகாட்டல் நெறிமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் அறிவுரித்தியுள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனை உடனே அமல்படுத்த பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்த சுற்றறிக்கையில், பள்ளிகளில் மாணவர்களால் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டால் அதற்கு, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களே முழுப் பொறுப்பு என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சேதமடைந்த பொருளை பெற்றோர்களோ அல்லது பாதுகாவலரோதான் மாற்றித் தரவேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான செயல்களில் குழந்தைகள் ஈடுபட்டால், முதலில் அவர்களுக்கு தக்க அலோசனை வழங்க வேண்டும். அடுத்தடுத்து தவறான செயல்களில் ஈடுபடும் குழந்தைகளை நல்வழிப்படுத்த ஒழுங்கு முறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாலலாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், தொடர்ந்து, தவறு செய்யும் குழந்தைகளை அருகில் உள்ள மற்றொரு பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்