மேலும் அறிய

School Teachers Transfer: ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிட மாற்றம் கிடையாது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும்.

இந்த ஆசிரியர்கள் வட மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களில்,  பணியமர்த்தப்பட உள்ளனர். குறிப்பாக திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், காலி இடங்கள் அதிகமாக உள்ள நிலையில், அவை நிரப்பப்பட உள்ளன. 

போட்டித் தேர்வு மூலம் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட உள்ளனர். 
இந்த நிலையில் இவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியர்களை பணியமர்த்தும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன், பள்ளிக் கல்வி இயக்குநருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறி உள்ளதாவது:

காலியாக உள்ள மாவட்டங்களுக்கு பணி நிரவல்

'' ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பால்‌ அனுமதிக்கப்பட்ட அளவைவிட உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களை, அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில்‌ 500க்கும்‌ மேற்பட்ட மாணவர்கள்‌ எண்ணிக்கையுடைய பள்ளிகளுக்கு பணிநிரவல்‌ செய்யப்பட வேண்டும்‌. அவ்வாறு பணிநிரவல்‌ செய்யப்பட்ட விவரத்தை, பணிநிரவல்‌ முடிவுற்ற 15 தினங்களுக்குள்‌ அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்‌.

பிரதி ஆண்டு ஜூன்‌ 1ம்‌ தேதியன்று உள்ளவாறு ஆசிரியர்‌ பணியிடங்களைக் கணக்கில்‌ கொண்டு அதே ஆண்டு ஜூன்‌ 30-க்குள்‌ பணிநிரவலை முடித்து ஜூலை 1ஆம்‌ நாளன்று காலிப்பணியிட மதிப்பீட்டினை அரசு அனுமதிக்கு அனுப்ப வேண்டும்‌.

தற்போது பட்டதாரி ஆசிரியர்‌ 2000 பணியிடங்களை நிரப்பிக்‌ கொள்ள அனுமதிக்கப்பட்டதில்‌ தேர்வாகும்‌ தேர்வர்களை பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ அதிகமாக காலியாக உள்ள கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும்‌ தருமபுரி மாவட்டங்களில்‌ முன்னுரிமை அடிப்படையில்‌ நியமனம்‌ செய்யப்பட வேண்டும்‌.

குறைந்தபட்சம்‌ 5 ஆண்டுகள்‌ பணி

முன்னுரிமை மாவட்டங்களில்‌ தேர்வர்களை முதலில்‌ நியமனம்‌ செய்யும்‌ போதே குறைந்தபட்சம்‌ 5 ஆண்டுகள்‌ இம்மாவட்டங்களில்‌ பணிபுரிய வேண்டும்‌ எனும்‌ நிபந்தனையை நியமன ஆணையில்‌ குறிப்பிட்டு நியமனம்‌
செய்யப்பட வேண்டும்‌.

ஆசிரியர்‌ பொது மாறுதல்‌ கலந்தாய்வு நடைபெறுதல்‌ குறித்து வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பணிநிரவல்‌ நடைமுறை பின்பற்றப்பட்ட பின்னரே ஆசிரியர்‌ பொது மாறுதல்‌ கலந்தாய்வு நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்‌.

மேற்காணும்‌ அறிவுறுத்தல்களை தவறாது கடைபிடிக்கப்பட வேண்டும்‌ என அறிவுறுத்தப்படுகிறது. மீறுவோர்‌ மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

757 பட்டதாரி ஆசிரியர்‌ காலி பணியிடங்களை நேரடி நியமனம்‌ மூலம்‌ நிரப்பக் கோரப்பட்ட அனுமதி தற்போது வழங்கப்பட முடியாத சூழல் உள்ளது.''

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார். 

பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள், வட மாவட்டப் பள்ளிகளில் அதிக அளவு காலியாக உள்ளது நினைவுகூரத் தக்கது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Embed widget