![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
NIRF Ranking 2024: செம்ம சென்னை; என்ஐஆர்எஃப் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 6ம் ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடம்!
NIRF Ranking 2024: ஒட்டுமொத்த அளவில் 6ஆவது ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடம் பிடித்துள்ளது. பல்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில் மொத்தம் 86 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
![NIRF Ranking 2024: செம்ம சென்னை; என்ஐஆர்எஃப் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 6ம் ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடம்! NIRF Ranking 2024 IIT Madras Top Spot Overall Category By IIT Bengaluru Bombay Delhi NIRF Ranking 2024: செம்ம சென்னை; என்ஐஆர்எஃப் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 6ம் ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/12/10cfde926c5e038b023ca937f498c4b21723458507202332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கான என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியலில், ஒட்டுமொத்த அளவில் 6ஆவது ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடம் பிடித்துள்ளது.
ஆண்டுதோறும் தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் (National Institutional Ranking Framework) என்ஐஆர்எப் பட்டியல் என்ற பெயரில் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டியல் இன்று மதியம் 3 மணிக்கு வெளியானது.
தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் 5 முக்கியக் காரணிகளை வைத்து மதிப்பிடப்படுகிறது. அதாவது கற்பித்தல், கற்றல் மற்றும் அதற்கான வளங்கள் (Teaching Learning & Resources), ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (Research and Professional Practice), பட்டப்படிப்பு (Graduation Outcome), வெளிப்படுதல் மற்றும் உள்ளடக்கம் (Outreach & Inclusivity), கருத்து (Perception) ஆகிய 5 காரணிகள் தரவரிசைப் பட்டியலைத் தீர்மானிக்கின்றன.
இந்த பட்டியலில், ஒட்டுமொத்த அளவில் 6ஆவது ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடம் பிடித்துள்ளது. பல்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில் மொத்தம் 89.79 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் தரவரிசைப் பட்டியலை https://webcast.gov.in/moe/ என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)