மேலும் அறிய

NEET UG 2023: நெருங்கும் நீட் தேர்வு...வெளியானது ஹால் டிக்கெட்...டவுன்லோட் செய்வது எப்படி?

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது.

நீட் தேர்வு 

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.  

இதில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் மட்டுமே, மருத்துவப் படிப்புக்குத் தகுதியானவர்கள் ஆவர். நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு, கலந்தாய்வில் உரிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும். 

மே 7ல் தேர்வு

2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. 499 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.  இத்தேர்வுக்கு மொத்தமாக 20,87,445 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.57 லட்சம் பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ள நிலையில், இதுவே கடந்தகால வரலாற்றில் அதிகமான எண்ணிக்கையாகும். 

அதன்படி, தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். இதில், மாணவிகளே அதிகம் ஆகும். 20.8 லட்சம் பேரில் 11.8 லட்சம் பேர் மாணவிகள் ஆகும். மாணவர்கள் சுமார் 9 லட்சம் பேர் இளங்கலை நீட் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். 

மாநில வாரியாக பார்த்தால் நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 2.77 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தில் 2.73 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.  இவை தவிர்த்து ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பிஹார், மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் தலா ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

ஹால் டிக்கெட் வெளியீடு

இந்நிலையில், 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை தற்போது வெளியிட்டது.  இந்த ஹால் டிக்கெட்டை https://neet.nta.nic.in/ என்ற இணையத்தில் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

பதிவிறக்கம் செய்வது எப்படி?

  • முதலில் https://neet.nta.nic.in/என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.
  • பின்பு, இணையத்தின் முகப்பு பக்கத்தில் தோன்றும் ஹால் டிக்கெட் இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப எண் (Application number), பிறந்த தேதி (Date of birth), பாஸ்வோர்ட்டை(password) உள்ளிட  வேண்டும்.
  • இதனை அடுத்து, டவுன்லோடு என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
10 ஆயிரம் பேருக்கு மணக்க, மணக்க மட்டன் பிரியாணி; மதுரையே மிரண்ட பிரம்மாண்ட விருந்து
10 ஆயிரம் பேருக்கு மணக்க, மணக்க மட்டன் பிரியாணி; மதுரையே மிரண்ட பிரம்மாண்ட விருந்து
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
Embed widget