NEET Cut-off: நீட் தேர்வுக்கான கட்-ஆஃப் குறைப்பு: எம்சிசி அறிவிப்பு
நீட் முதுநிலைத் தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் அனைத்து வகையான பிரிவினருக்கும் 15% சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
![NEET Cut-off: நீட் தேர்வுக்கான கட்-ஆஃப் குறைப்பு: எம்சிசி அறிவிப்பு NEET PG 2021 Cut-off Reduced by 15%, NBE to Declare Revised Result NEET Cut-off: நீட் தேர்வுக்கான கட்-ஆஃப் குறைப்பு: எம்சிசி அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/28/b9adcf5f5f0dbc9bd402b040708a104d_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நீட் முதுநிலைத் தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் அனைத்து வகையான பிரிவினருக்கும் 15% சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
அகில இந்திய அளவிலான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வானது, இந்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு, அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக நடத்தப்படுகிறது.இதன்படி 5 மே, 2013 முதல் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறதுது. 2019-ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.
நீட் தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All India Pre Medical Test (AIPMT)) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் நீட் முதுநிலைத் தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் அனைத்து வகையான பிரிவினருக்கும் 15% சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கலந்தாய்வுக் குழுவின் உறுப்பினர் செயலரும் ஏடிஜியுமான மருத்துவர் ஸ்ரீனிவாஸ், தேசியத் தேர்வு வாரியத்தின் (national board of examination) நிர்வாக இயக்குநருக்கும் மத்திய் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
''ஏராளமான விவாதத்துக்குப் பிறகு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதன்படி, நீட் முதுநிலைத் தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் அனைத்து வகையான பிரிவினருக்கும் 15% சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பொதுப் பிரிவினருக்குத் தேவைப்படும் கட் ஆஃப் மதிப்பெண் 35 சதவீதமாகக் குறையும். அதேபோல பொது மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவைப்படும் கட் ஆஃப் மதிப்பெண் 30 சதவீதமாகக் குறையும். அதேபோல ஓபிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய பிரிவினருக்கு 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி திருத்தி அமைக்கப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண்களைக் கொண்டு மாற்றி அமைக்கப்பட்ட மதிப்பெண் பட்டியலை அனுப்பவும், தேர்வர்களுக்கு அந்தத் தகவலைத் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது''.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Watch Video: நேரில் பார்த்தால் காலில் விழுந்து அழுவேன்.. ஸ்ரேயா கோஷல் பற்றி உருகி பேசிய சிவாங்கி!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)