NEET Exam: 2024 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு.. தேதியை அறிவித்தது தேசிய தேர்வு முகமை..!
2024 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு எப்போது நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு எப்போது நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு நீட் நுழைவு தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அடுத்தாண்டு நீட் நுழைவுத் தேர்வு எப்போது நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
#NTA releases Examination Calendar for Academic Year 2024-25.#JEE pic.twitter.com/trnYPRcozT
— Sunil (@TweetsOfSunil) September 19, 2023
அதன்படி 2024 ஆம் ஆண்டு நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான முடிவுகள் ஜூன் 2வது வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ தேர்வு இரண்டு கட்டமாக நடைபெறும். இதில் முதல் கட்டத் தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் நடைபெறும். 2 ஆம் கட்ட தேர்வு ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதிக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக பொது நுழைவுத் தேர்வு க்யூட் (CUET) 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். இதில் இளநிலை படிப்புகளுக்கான தேர்வு மே 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும்.
முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு மார்ச் 11 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுஜிசி நெட் தேர்வு ஜூன் 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதிக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.