‛பள்ளிகளைத் திறந்தால் நடவடிக்கை’ எச்சரிக்கும் மெட்ரிக் பள்ளி இயக்குநரகம்!
வரும் ஜனவரி 2 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீறி பள்ளிகளைத் திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் ஜனவரி 2 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீறி பள்ளிகளைத் திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதனைப் பரிசீலித்த தமிழக அரசு கடந்த டிசம்பர் 25 ஆம் தொடங்கி வரும் ஜனவரி 2 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. இதனை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். அதேவேளையில், தமிழகத்தில் 10 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இந்த கல்வியாண்டில் கட்டாயம் நடக்கும் என்றும் தெரிவித்தார். மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகும்படி அறிவுறுத்திய அவர், ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வு, மார்ச் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், அரையாண்டு விடுமுறையில் சில தனியார் மெட்ரிக் பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வரச் சொல்லி நிர்பந்திப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
ஒமைக்ரான் பரவல் இருப்பதால், மக்கள் கவனமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் ஆணைக்கிணங்க வரும் 3ஆம் தேதியில் இருந்து 15 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், ஒமைக்ரான் அச்சுறுத்தலையும் மீறி விடுமுறையிலும் மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்வது பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் தான், வரும் ஜனவரி 2 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீறி பள்ளிகளைத் திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரண்டாண்டுகளாக ரத்து:
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 - 20 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. 1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ் போடப்பட்டது. கடந்த 2020 - 21 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும் என ஆரம்பம் முதலே அரசாங்கம் கூறிவரும் சூழலில் ஒமைக்ரான் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் ஜனவரி, பிப்ரவரியில் மூன்றாம் அலை உருவாகலாம் எனக் கூறப்படும் சூழலில் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளது மாணவர் சமுதாயத்துக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்