JEE Main 2023 Results: ஜே.இ.இ மெயின் தாள் 2 தேர்வு முடிவுகள் எப்போது?- வெளியான தகவல்
ஜேஇஇ மெயின் தாள் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி தேசியத் தேர்வுகள் முகமை விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது.
ஜேஇஇ மெயின் தாள் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி தேசியத் தேர்வுகள் முகமை விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது.
2023ஆம் ஆண்டு ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு (session 1) ஜனவரி 24 முதல் 31 ஆம் தேதி வரை (26ஆம் தேதி நீங்கலாக) நடைபெற்றது. இந்த அமர்வுக்கு மாணவர்கள் ஜனவரி 12ஆம் தேதி வரை jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்தனர். ஜனவரி 14 வரை விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொண்டனர்.
பிப்ரவரி 7ஆம் தேதி தேர்வு முடிவுகள்
இந்தத் தேர்வின் முதலாம் தாளை எழுத 8,60,064 பேர் விண்ணப்பித்தனர். இரண்டாம் தாளை எழுத 46,465 பேர் விண்ணப்பித்தனர். கடந்த 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 3.84 சதவீதம் பேர் அதிகம் விண்ணப்பித்தனர். கடந்த முறை 7.69 லட்சம் பேர் ஜேஇஇ மெயின் தேர்வை எழுதினர். 2023ஆம் ஆண்டில் 8.23 லட்சம் பேர் தேர்வை எழுதினர். அதாவது 95.8% பேர் அதிகபட்சமாக இந்த முறை தேர்வு எழுதினர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகின. அன்றே இரண்டாவது அமர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி விட்டதாக என்டிஏ தெரிவித்தது. எனினும் இதுவரை விண்ணப்பப் பதிவு தொடங்கவில்லை.
இரண்டாவது அமர்வு எப்போது?
இரண்டாவது அமர்வுக்கான ஜேஇஇ தேர்வு ஏப்ரல் மாதத்தில் 6, 8, 10- 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் பிப்ரவரி மாதத்தில் வெளியாக உள்ளன. இந்த அமர்வுக்கு, மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த இரண்டு அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதைக் கொண்டு மாணவர்கள் தர வரிசைப்படி கல்லூரிகளில் சேரலாம். அதேபோல, கேட்கப்படும் 90 கேள்விகளில் 75 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.
இதற்கிடையே ஜேஇஇ மெயின் தாள் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி தேசியத் தேர்வுகள் முகமை விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது. அதன் பிறகே ஜேஇஇ 2ஆவது அமர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேஇஇ மெயின் முதலாம் அமர்வில் கேட்கப்படும் இரண்டாம் தாளை எழுத 46,465 பேர் விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்வு நாடு முழுவதும் இளங்கலை கட்டிடவியல் மற்றும் இளங்கலை பிளானிங் படிப்புகளில் (B. Arch and B. Planning) சேர நடத்தப்படுகிறது.