JEE Main Admit Card: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு; டவுன்லோடு செய்வது எப்படி?
ஜேஇஇ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகி உள்ளது. அதைத் தேர்வர்கள் டவுன்லோடு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஜேஇஇ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகி உள்ளது. அதைத் தேர்வர்கள் டவுன்லோடு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதைத் தேர்வர்கள் டவுன்லோடு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது.
அதன்படி, நுழைவுத் தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அண்மையில் வெளியிட்டது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்ப இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஹால்டிக்கெட் வெளியீடு
ஜேஇஇ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகி உள்ளது. அதைத் தேர்வர்கள் டவுன்லோடு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
* தேர்வர்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, 3 வெவ்வேறு இணையதள முகவரிகள் அளிக்கப்பட்டுள்ளன.
* இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
* இதில் உள்ள 3 முகவரிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வர்கள் க்ளிக் செய்ய வேண்டும். அதில் தேர்வர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
* அதில் தோன்றும் 2022ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டைத் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஜே.இ.இ. தேர்வு ஆண்டுதோறும் நான்கு கட்டங்களாகத் தேசியத் தேர்வுகள் முகமையால் தேர்வு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலை தள பக்கங்களிலும் பின் தொடரலாம்