மேலும் அறிய

10th 12th Retotaling: 10, 12-ம் வகுப்பு மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

மாணவர்கள், மறுகூட்டலுக்கும் விடைத்தாள் நகலைப் பெறுவதற்கும் நாளை (ஜூன் 22) முதல் வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், மறுகூட்டலுக்கும் விடைத்தாள் நகலைப் பெறுவதற்கும் நாளை (ஜூன் 22) முதல் வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

10,12- ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்‌ / மதிப்பெண்‌ பட்டியல்‌ பதிவிறக்கம்‌ செய்தல்‌:

24.06.2022 முற்பகல்‌ 11.00 மணி முதல்‌ மே 2022, பத்தாம்‌ வகுப்பு / பன்னிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வழுதிய பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள்‌ வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள்‌ வழியாகவும்‌, தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்‌ / மதிப்பெண்‌ பட்டியலைப் பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

மேலும்‌, 24.06.2022 முற்பகல்‌ 11.00 மணி முதல்‌ பள்ளி மாணவர்கள்‌ / தனித்தேர்வர்கள்‌ தங்களுக்கான தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்‌ / மதிப்பெண்‌ பட்டியலை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து என்ற www.dge.tn.nic.in இணையதளத்திலும்‌ தாங்களே பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

பத்தாம்‌ வகுப்பு தேர்வர்கள்‌ - மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்‌ முறை:

மே 2022, பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ தாம்‌ தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும்‌ பள்ளி மாணவர்கள்‌ / தனித்தேர்வர்கள்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்‌.

மே 2022 பத்தாம்‌ வகுப்பு தேர்வெழுதி விடைத்தாட்களின்‌ மதிப்‌பெண்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர்‌ 22.06.2022 (புதன்‌ கிழமை) காலை 10.00 மணி முதல்‌ 29.06.2022 (புதன்‌ கிழமை) மாலை 5.00 மணி வரை தங்கள்‌ பள்ளி வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையம்‌ வழியாகவும்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.

மறுகூட்டல்‌ கட்டணம்‌:

ஒவ்வொரு பாடத்திற்கும்‌ - ரூ.205/-

மறுகூட்டலுக்கான கட்டணம்‌ செலுத்தும்‌ முறை:

மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளியிலும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையத்திலும்‌ பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும்‌ ஒப்புகைச்‌ சீட்டினை மாணவர்கள்‌ பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்‌. 

ஒப்புகைச்‌ சீட்டில்‌ குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப்‌ பயன்படுத்தியே தேர்வர்கள்‌ மறுகூட்டல்‌ முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்‌.

பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்வர்கள்‌ - விடைத்தாள்‌ நகல்‌ / மறுகூட்டல்‌-। விண்ணப்பிக்கும்‌ முறை:

விடைத்தாள்‌ நகல்‌ / மறுகூட்டல்‌ கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள்‌ வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையங்கள்‌ வழியாகவும்‌ 22.06.2022 (புதன்‌ கிழமை) காலை 10.00 மணி முதல்‌ 29.06.2022 (புதன்‌ கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்‌.

விடைத்தாள்‌ நகல்‌, மறுகூட்டல்‌ ஆகியவற்றில்‌ எதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள்‌ விண்ணப்பிக்க இயலும்‌. தேர்வர்கள்‌ தங்களது விடைத்தாளின்‌ நகல்‌ வேண்டுமா? அல்லது மதிப்பெண்‌ மறுகூட்டல்‌ செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன் பின்னர்‌ விண்ணப்பிக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. விடைத்தாள்‌ நகல்‌ பெற்றவர்கள்‌ மட்டுமே விடைத்தாள்‌ மறுமதிப்பீடு கோரி பின்னர்‌ விண்ணப்பிக்க இயலும்‌.

மதிப்பெண்‌ மறுகூட்டல்‌ கோரி விண்ணப்பிக்கும்‌ பாடத்திற்கு விடைத் தாள்களின்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்திட இயலாது. விடைத்தாளின்‌ நகல் ‌பெற்ற பிறகு அவர்கள்‌ மறுகூட்டல்‌ / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்‌.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மீண்டும் மீண்டுமா? திருக்குறளை பாதியில் மறந்த அமைச்சர் விஸ்வநாதன்- பரபரப்பு வீடியோ
மீண்டும் மீண்டுமா? திருக்குறளை பாதியில் மறந்த அமைச்சர் விஸ்வநாதன்- பரபரப்பு வீடியோ
புதுச்சேரி: மொபைல் ஆப்பில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு - புதிய வசதி அறிமுகம்!
புதுச்சேரி: மொபைல் ஆப்பில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு - புதிய வசதி அறிமுகம்!
வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
காது கேளாத, வாய் பேச இயலாத இளைஞரா நீங்கள்? உங்களுக்காகவே காத்திருக்கிறது சென்னை கிண்டி அரசு ஐ.டி.ஐ!
காது கேளாத, வாய் பேச இயலாத இளைஞரா நீங்கள்? உங்களுக்காகவே காத்திருக்கிறது சென்னை கிண்டி அரசு ஐ.டி.ஐ!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus tickets advertisements: விஜய் அரசின் அசத்தல் பிளான்.! பஸ் டிக்கெட்டில் விளம்பரம்- வருவாயை அள்ள திட்டம் போட்ட தவெக அரசு
விஜய் அரசின் அசத்தல் பிளான்.! பஸ் டிக்கெட்டில் விளம்பரம்- வருவாயை அள்ள திட்டம் போட்ட தவெக அரசு
Mayor Priya: மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்
ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ADMK To TVK : சுத்தமா மரியாதையே இல்ல. ! பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்- தவெகவில் நடப்பது என்ன.?
சுத்தமா மரியாதையே இல்ல. ! பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்- தவெகவில் நடப்பது என்ன.?
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
Embed widget