மேலும் அறிய

அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?

உலகிலேயே முதன்முறையாக, ஐஐடி சென்னை மனிதக் கரு மூளையின் மிக விரிவான 3டி உயர் தெளிவுத்திறன் படங்களை வெளியிட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட அதிநவீன மூளை வரைபடமாக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 5,132 மூளைப் பகுதிகள் செல்-தெளிவுத் திறனில் டிஜிட்டல் முறையில் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம் இந்தப் பணிகளை முன்னெடுத்துள்ளது.

சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம்

அறிவியல், தொழில்நுட்பம், கணினி மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் பெரிய அளவிலான பல்துறை முயற்சியை ஆற்றுவதற்கும், மனித மூளையை செல்லுலார் அளவில் வரைபடமாக்குவதற்கும் 2022-ல் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம், அதிநவீன வசதிகளுடன் தொடங்கப்பட்டது.

இங்கு உருவாக்கப்பட்ட அதிநவீன மூளை வரைபடமாக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 5,132 மூளைப் பிரிவுகள் டிஜிட்டல் முறையில் பெறப்பட்டுள்ளன. இந்தப் பணியால் நரம்பியல் துறை மேம்படுத்தப்படுவதுடன், மூளையைப் பாதிக்கும் உடல்நிலைக்கான சிகிச்சையின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

குறைந்த செலவில் நடைபெற்ற ஆய்வு

இத்தகைய மேம்பட்ட மனித நரம்பியல் தரவுகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட தொகையைப் பொறுத்தவரை மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்குதான் செலவிடப்பட்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ருமேனியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, சென்னையைச் சேர்ந்த மெடிஸ்கேன் சிஸ்டம்ஸ், சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவையும் இணைந்து இந்த ஆராய்ச்சிப் பணி மேற்கொள்ளப்பட்டது.

உலகெங்கும் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் வகையில், இதன் தரவுத் தொகுப்பான ‘தரணி’யை (DHARANI) ஓபன் சோர்ஸ் முறையில் பின்வரும் இணைப்பில் காணலாம் (https://brainportal.humanbrain.in/publicview/index.html)


அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?

என்ன பயன்?

கருவில் இருந்து குழந்தைப் பருவம், வளரிளம் பருவம், இளமைப் பருவம் வரை மூளை வளர்ச்சியையும், கற்றல் குறைபாடுகள், மனஇறுக்கம் போன்ற வளர்ச்சிக் குறைபாடுகளையும் புரிந்து கொள்வது நாட்டிற்கு மிகவும் அவசியமாகிறது.

தற்போதைய கரு இமேஜிங் தொழில்நுட்பங்கள், ஆரம்பகால நோயறிதல், வளர்ச்சிக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளித்தல் போன்றவை இத்தகைய உயர் தெளிவுத்திறன் கொண்ட மூளைப் படங்களை உருவாக்குவதன் முக்கிய பயன்பாடுகளாகும்.

இந்த ஆராய்ச்சியின் முக்கியத்தை விவரித்த ஜர்னல் ஆஃப் கம்பேரேட்டிவ் நியூராலஜி இதழின் ஆசிரியர் குழுத் தலைவரான சுசானா ஹெர்குலானோ-ஹவுசல், “மனிதக்கரு மூளை பற்றி பொதுவில் அணுகக்கூடிய மிகப்பெரிய டிஜிட்டல் தரவுத்தொகுப்புதான் பரணி.  2020-2022 ஆண்டுகளில் கோவிட் தொற்றுக் காலத்தில் இந்தியாவிற்கான தனிப்பயனாக்கப்பட்ட தொழில்நுட்பத் தளத்துடன் இது உருவாக்கப்பட்டது. ஆலன் பிரைன் அட்லஸ்-க்கு செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்குதான் செலவிடப்பட்டுள்ளது.

ஆலன் பிரைன் இன்ஸ்டிடியூட் உடன் ஐஐடி மெட்ராஸ் இணைந்து செயல்பட்டு, அமெரிக்காவுடன் மனித மூளை வரைபட அட்டவணையில் இந்தியா இணைகிறது. அங்கு மனித மூளையை உருவாக்கும் கட்டமைப்புகள் பற்றி கிடைக்கக்கூடிய அறிவை மனிதகுலத்திற்கு இலவசமாகக் கிடைக்கக்கூடிய அட்லஸ்களை வழங்க பெரிய தொகை முதலீடு செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 
ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 
நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே! நடப்புத் தேர்விலேயே 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புக: தமிழக அரசுக்குத் தேர்வர்கள் கண்ணீர் கோரிக்கை!
நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே! நடப்புத் தேர்விலேயே 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புக: தமிழக அரசுக்குத் தேர்வர்கள் கண்ணீர் கோரிக்கை!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: செஞ்சியில் காலாவதி சாக்லேட் சாப்பிட்டு 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: செஞ்சியில் காலாவதி சாக்லேட் சாப்பிட்டு 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!
இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
How Car Airbags Work: இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
EPFO Auto Settlement: PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
Revolt RVX: ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
Embed widget