வாழ்க்கையில் அதிகமாக கவலைப்படாமல் இருக்க உதவும் சில வழிமுறைகளை நிபுணர்கள் கூறுகின்றனர்.
நேர்மறையான எண்ணங்களை அடிக்கடி நினைப்பதை பழக்கமாக்கவும்.
உங்கள் மன அமைதிக்கு தீங்கு விளைவிப்பதை கைவிடுங்கள்.
சமூக வலைதளங்களில் நேரம் செலவிடுவதை குறைக்கவும்.
நல்ல இசை, பாடலை கேட்கலாம்.
ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தை கவலைப்படுதற்காக ஒதுக்கிவிடுங்க. இல்லையெனில் நாள் முழுவதும் எதையாது நினைத்து வருத்தப்பட வேண்டும்.
மகிழ்ச்சியாக இருங்க.
ஒரு டப்பாவில் உங்களது கவலைகளை காகிதத்தில் எழுது போட்டுவிடுங்க. வாரத்திற்கு ஒருமுறை எடுத்து அதை பார்த்து தூக்கிப்போடுங்கள். கவலைப்படுவது குறைந்துவிடும்.
உங்கள் நாட்களுக்காக நன்றியுடன் இருங்கள். எப்போதும் கவலைப்படாமல் உங்களிடம் உள்ளவைகளை நன்றியுடன் நினைத்துப் பாருங்கள்.
உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை செய்யுங்க. ஓவியம் தீட்டுதல், பாடுவது, உடற்பயிற்சி செய்வது ஏதாவது ஒன்றை செய்யவும்.