மேலும் அறிய

Minister Ponmudi: இதுகூட தெரியாதா? நீங்க எல்லாம் ஒரு பேராசிரியரா? பம்மிய நபர்.. பாடமெடுத்த அமைச்சர் பொன்முடி

நீங்கள் எல்லாம் அரசியல் அறிவியல் துறை பேராசிரியரா? இதுகூடத் தெரியாமல் உட்கார்ந்து இருக்கிறீர்களே? என்ன பாடம் நடத்துகிறீர்கள்?’’ என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சென்னை, சைதாப்பேட்டை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Open University), அகடமிக் பிளாக் (Academic Block) பட்டமளிப்பு அரங்கில் (Convocation Hall) நேற்று மதியம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக அரசியலமைப்பு நாள் (World Constitution Day 2024) நிறைவு விழாவில் (Veledictory Ceremony) கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

’’கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் எல்லாம் படிக்க வேண்டும் என்பதற்காகவே புதுமைப் பெண் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசியல் அறிவியலில் பாடத்தில் இத்தனை பெண்கள் சேர்ந்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது நிறைய உரையாடல்கள் நிகழ்த்தப்படும். இறையாண்மை ஜனநாயக குடியரசு என்று அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கப்பட்டது என்று பேசிக் கொண்டிருந்த அமைச்சர் பொன்முடி,ஒற்றை ஆட்சி (Unitary state) என்றால் என்ன? என்று மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார்.

ஆனால் யாரும் பதில் சொல்லவில்லை.

‘’அரசியல், பொது நிர்வாகத் துறை மாணவர்கள்தானே இங்கு வந்திருக்கிறீர்கள்.. யாருக்கும் தெரியவில்லையா? எங்கே இருக்கிறது?’’ என்று கேட்க, யாருமே வாயைத் திறக்கவில்லை.

’’யாராவது ஒருவராவது சொல்லுங்களேன். ஆசிரியராக இருந்ததால் கேள்வி கேட்டுப் பழகிவிட்டது. பதில் சொல்லுங்கள்’’ என்று அமைச்சர் பொன்முடி கேட்க, ஒரு மாணவர் இந்தியா என்று பதில் கூறினார்.

’’இந்தியாவா?’’ என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், ’’ஆசிரியர்களாவது சொல்லுங்கள்’’ என்று கேட்டார்.

பேராசிரியர் ஒருவர், பாண்டிச்சேரி என்று கூறினார். உடனே ஆவேசமான அமைச்சர், ’’நீங்கள் எல்லாம் அரசியல் அறிவியல் துறை பேராசிரியரா? இதுகூடத் தெரியாமல் உட்கார்ந்து இருக்கிறீர்களே? என்ன பாடம் நடத்துகிறீர்கள்?’’ என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். ’’ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து, ’’ஒற்றை ஆட்சி என்றால் ஒரே மத்திய அரசு என்று பொருள். அதன்கீழ் மாநிலங்கள் எவையும் இருக்காது. மத்திய அரசு மட்டுமே இருக்கும். அதன் கீழ் உள்ளாட்சித் துறைகள் மட்டும் இருக்கும். இதற்கு உதாரணம் இங்கிலாந்து.

ஒற்றை ஆட்சியைப் போல கூட்டாட்சி அரசு உள்ளது. இதற்கு அப்போதைய உதாரணம் அமெரிக்கா. அங்குதான் முதன்முதலில் கூட்டாட்சி அறிமுகம் செய்யப்பட்டது’’.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

மாணவர்கள் மத்தியிலேயே பேராசிரியர்களுக்கும் சேர்த்து அமைச்சர் பொன்முடி பாடமெடுத்தது விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
"கிடைச்ச இடத்துல சாப்பிட்டேன்.. கிடைச்ச இடத்துல தூங்குனேன்" அமெரிக்காவில் பிரதமர் மோடி உருக்கம்!
"6 மணிக்கு விளக்கு ஏத்துங்க.. தோஷம் போயிடும்" பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்!
Video: அமெரிக்காவில் பிரதமர் பேசும்போது, கூட்டத்திலிருந்து வந்த அந்த வார்த்தை.! சிரித்த மோடி.!. வைரலாகும் வீடியோ.!
அமெரிக்காவில் பிரதமர் பேசும்போது, கூட்டத்திலிருந்து வந்த அந்த வார்த்தை.! சிரித்த மோடி.!. வைரலாகும் வீடியோ.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi : ”நான் தப்பா பேசுனேனா..என்னை தடுக்க முடியாது” ராகுல் ஆவேசம்Aadhav Arjuna on deputy cm : ”உதய் துணை முதல்வரா? திருமா-வ போடுங்க” கொளுத்திப்போட்ட ஆதவ் அர்ஜூனாAtishi CM oath : கெஜ்ரிவாலுக்கு காலி CHAIR! பரதன் பாணியில் அதிஷிRowdy Seizing Raja | PISTOL டீலிங்கில் பில்லா..CEASE செய்வதில் கில்லாடி! யார் இந்த சீசிங் ராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
"கிடைச்ச இடத்துல சாப்பிட்டேன்.. கிடைச்ச இடத்துல தூங்குனேன்" அமெரிக்காவில் பிரதமர் மோடி உருக்கம்!
"6 மணிக்கு விளக்கு ஏத்துங்க.. தோஷம் போயிடும்" பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்!
Video: அமெரிக்காவில் பிரதமர் பேசும்போது, கூட்டத்திலிருந்து வந்த அந்த வார்த்தை.! சிரித்த மோடி.!. வைரலாகும் வீடியோ.!
அமெரிக்காவில் பிரதமர் பேசும்போது, கூட்டத்திலிருந்து வந்த அந்த வார்த்தை.! சிரித்த மோடி.!. வைரலாகும் வீடியோ.!
A.Raja: ஆதவ் அர்ஜுனா கருத்தை திருமாவளவன் ஏற்றுக் கொள்ள மாட்டார் -ஆ.ராசா நம்பிக்கை
ஆதவ் அர்ஜுனா கருத்தை திருமாவளவன் ஏற்றுக் கொள்ள மாட்டார் -ஆ.ராசா நம்பிக்கை
Miss Universe India: இந்திய பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் 18 வயதான ரியா சிங்கா.! யார் இவர்.?
இந்திய பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் 18 வயதான ரியா சிங்கா.! யார் இவர்.?
Breaking News LIVE:  சீதாராம் யெச்சூரி நினைவேந்தல் நிகழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.!
Breaking News LIVE: சீதாராம் யெச்சூரி நினைவேந்தல் நிகழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.!
Supreme Court: உச்சநீதிமன்றம் அதிரடி - ”சிறார் ஆபாச படங்கள் அல்ல சிறார் பாலியல் துஷ்பிரயோகம்” போக்சோவில் திருத்தம்
Supreme Court: உச்சநீதிமன்றம் அதிரடி - ”சிறார் ஆபாச படங்கள் அல்ல சிறார் பாலியல் துஷ்பிரயோகம்” போக்சோவில் திருத்தம்
Embed widget