Engineering Counselling: பொறியியல் கலந்தாய்வு: எந்த கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு எப்போது கலந்தாய்வு, இடஒதுக்கீடு?- முழு விவரம்
எந்த கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு எப்போது கலந்தாய்வு, இடஒதுக்கீடு என்பது குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு நாளை தொடங்க உள்ள நிலையில், எந்த கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு எப்போது கலந்தாய்வு, இடஒதுக்கீடு என்பது குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பொறியியல் படிக்க விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை (ஆகஸ்ட் 20) முதல் சிறப்புப் பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது. ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது. சிறப்புப் பிரிவில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு சிறப்புக் கலந்தாய்வு நாளை (ஆகஸ்ட் 20) தொடங்கி, ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு 431 கல்லூரிகள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்கும் 1,58,157 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது. 1.48 லட்சம் பொறியியல் இடங்களுக்கு 1.58 லட்சம் விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளன. இதனால் விண்ணப்பிப்பவரில் பெரும்பாலும் அனைவருக்குமே இடம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
யார், யாருக்கு எந்த வரிசையில் கலந்தாய்வு?
சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு
விளையாட்டுப் பிரிவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு விருப்பத் தெரிவு (Choice Filling), முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கான விருப்பத் தெரிவு தொடங்கும் நாள்- ஆகஸ்ட் 20
விருப்பத் தெரிவு (Choice Filling) முடியும் நாள்- ஆகஸ்ட் 20
உத்தேச இட ஒதுக்கீடு வெளியாகும் நாள் (Release of tentative allotment)- ஆகஸ்ட் 20
உத்தேச இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் நாள் (Confirmation of tentative allotment)- ஆகஸ்ட் 21
தற்காலிக இட ஒதுக்கீடு வெளியாகும் நாள் (Release of provisional allotment) - ஆகஸ்ட் 21
*
பொது சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு
விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ஆகியோருக்கு விருப்பத் தெரிவு (Choice Filling) தொடங்கும் நாள்- ஆகஸ்ட் 21
விருப்பத் தெரிவு (Choice Filling) முடியும் நாள்- ஆகஸ்ட் 22
உத்தேச இட ஒதுக்கீடு வெளியாகும் நாள் - ஆகஸ்ட் 23
உத்தேச இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் நாள் - ஆகஸ்ட் 23
தற்காலிக இட ஒதுக்கீடு வெளியாகும் நாள் - ஆகஸ்ட் 24
*
பொது கல்வி மற்றும் தொழிற்கல்விப் பிரிவினருக்கான கலந்தாய்வு
விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ஆகியோருக்கு விருப்பத் தெரிவு (Choice Filling) நாள்- ஆகஸ்ட் 25- 27
உத்தேச இட ஒதுக்கீடு வெளியாகும் நாள் - ஆகஸ்ட் 28
உத்தேச இட ஒதுக்கீடு உறுதி செய்யும் நாள் - ஆகஸ்ட் 28- 29
உத்தேச இட ஒதுக்கீட்டை நாள் - ஆகஸ்ட் 23
தற்காலிக இட ஒதுக்கீடு வெளியாகும் நாள் - ஆகஸ்ட் 30
மாணவர்கள் கல்லூரிகளில் சேரக் கடைசி நாள் - ஆகஸ்ட் 30- செப்டம்பர் 7
மேல்நோக்கி நகர்த்தப்பட்ட மாணவர்களுக்கான தற்காலிக இட ஒதுக்கீடு வெளியாகும் நாள் - செப்டம்பர் 9.
மாணவர்கள் https://cutoff.tneaonline.org/ என்ற இணைய முகவரி மூலம் தங்களின் கட் -ஆஃப் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளலாம்.