மேலும் அறிய

En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!

தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, கல்லூரி கனவு என்ற பெயரில் உயர் கல்வி வழிகாட்டல் திட்டம் நடைபெற உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு “என் கல்லூரி கனவு” எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் இரண்டாம் கட்டமாக 14.05.2024 முதல் 21.05.2024 வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் கூறி உள்ளதாவது:

’’ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற 91.03 சதவீத மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த இரண்டு ஆண்டு பொதுத்தேர்வின் தேர்ச்சியினை காட்டிலும் சதவீதம் அதிகமாகும். பழங்குடியினர்

நலப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் (95.15) தமிழகத்தின் சராசரி தேர்ச்சி விகிதம் 94.56 விட அதிகமாகும். இத்துறையின் கீழ் செயல்படும் 26 ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணக்கர்களும், 14 பழங்குடியினர் நலப் பள்ளி மாணக்கர்களும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை மேம்படுத்தவும், இடைநிற்றல் எண்ணிக்கையைக் குறைக்கவும், “என் கல்லூரி கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் முன்னெடுப்பு திட்டம் வருடந்தோறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிகழ்ச்சி இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக, 38 மாவட்டங்களைச் சேர்ந்த 13,800 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு உதவிடும் பொருட்டு, இரண்டாம் கட்டமாக உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி 14.05.2024 முதல் 21.5.2024 வரை மாவட்ட வாரியாக நடத்தப்படவுள்ளது.

14.05.2024 - சென்னை, நாகப்பட்டினம், பெரம்பலூர், மயிலாடுதுறை

15.05.2024 - தருமபுரி, திண்டுக்கல், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கடலூர்

16.05.2024 - ஈரோடு, அரியலூர், தென்காசி, திருப்பூர், தஞ்சாவூர்

17.05.2024 - காஞ்சிபுரம், மதுரை, விழுப்புரம், நீலகிரி, சேலம்

18.05.2024 - தூத்துக்குடி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருச்சி, திருவள்ளுர், கோயம்புத்தூர், திருநெல்வேலி

20.05.2024 - கரூர், திருப்பத்தூர், விருதுநகர், திருவாரூர், வேலூர், ராமநாதபுரம், தேனி

21.05.2024 - ராணிப்பேட்டை, சிவகங்கை, நாமக்கல், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி

இதில், பள்ளி இறுதி ஆண்டில் தேந்தெடுத்த பாடங்களுக்கேற்ப உயர்கல்வி வழிகாட்டுதல், கல்லூரிகளை தேந்தெடுக்கும் முறை, விண்ணப்பம் பதிவு செய்வதற்கான உயர்கல்வி நிறுவனங்களின் இணையதள முகவரி, விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முறை, தேவையான சான்றிதழ்கள் குறித்து உரிய விளக்கப் படங்களுடன் பல்வேறு துறை நிபுணர்கள் மூலம் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது.

உயர்கல்வி குறித்த மாணவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு இத்துறையின் சார்பில் பல்வேறு துறை நிபுணர்களை கொண்ட டெலிகிராம் அலைவரிசை (https://t.me/+qbZngA9zNH82YTdl) உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உயர்கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களையும் மாணவர்கள் தீர்த்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்காணும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பள்ளி இறுதியாண்டு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த அனைத்து மாணவர்களும் கலந்துகொள்ளலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?
Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
Rasipalan December 08: பேச்சுக்களை குறைங்க மகரம்; கும்பத்துக்கு வரவு: உங்க ராசி பலன்?
Rasipalan December 08: பேச்சுக்களை குறைங்க மகரம்; கும்பத்துக்கு வரவு: உங்க ராசி பலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?
Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
Rasipalan December 08: பேச்சுக்களை குறைங்க மகரம்; கும்பத்துக்கு வரவு: உங்க ராசி பலன்?
Rasipalan December 08: பேச்சுக்களை குறைங்க மகரம்; கும்பத்துக்கு வரவு: உங்க ராசி பலன்?
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
Embed widget