CUET UG Answer Key 2023: க்யூட் இளநிலைத் தேர்வு தற்காலிக விடைக் குறிப்பு வெளியீடு; சரிபார்ப்பது, ஆட்சேபிப்பது எப்படி?
மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியாகி உள்ளன.
மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியாகி உள்ளன. மாணவர்கள் இதை, https://cuet.nta.nic.in/ மற்றும் https://cuet.samarth.ac.in/ ஆகிய இணைய தளங்களுக்குச் சென்று காணலாம்.
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக பொது நுழைவுத் தேர்வு (க்யூட் தேர்வு) 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. எனினும் மாணவர் சேர்க்கைக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. 3 ஸ்லாட்டுகளில் இந்தத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் 250 மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.2023 ஆம் ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வின் முதல் ஷிஃப்ட் மே 21 ஆம் தேதி தொடங்கி ஜூன் 2 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஜூன் 5,6 ஆகிய தேதிகளிலும் தேர்வு நடைபெற்றது.இந்தத் தேர்வை நாடு முழுவதும் 271 நகரங்களில் 447 தேர்வு மையங்களில் மாணவர்கள் எழுதினர். முதல் ஷிஃப்ட்டை 87,879 மாணவர்கள் எழுதினர்.
இளநிலைத் தேர்வு, கணினி வழியில் 3 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. 2ஆவது ஸ்லாட் 3 மணி நேரம் 45 நிமிடங்களுக்கு நடைபெற்றது.இந்தத் தேர்வு ஜூன் 23ஆம் தேதி வரை நடைபெற்றது. 9 கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்வை எழுத மொத்தமாக 16.85 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 14.99 லட்சம் மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தினர். இதில் 6.51 லட்சம் பேர் மாணவிகள் ஆவர். இதில், 14, 90,000 மாணவர்கள் தேர்வை எழுதினர். இந்தியா மற்றும் வெளிநாடு முழுவதும் 411 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில், தேர்வை எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியாகி உள்ளன. மாணவர்கள் இதை, https://cuet.nta.nic.in/ மற்றும் https://cuet.samarth.ac.in/ ஆகிய இணைய தளங்களுக்குச் சென்று காணலாம். விடைக் குறிப்பில் ஆட்சேபனை செய்ய விரும்பும் மாணவர்கள் ரூ.200 செலுத்தி, ஆட்சேபிக்கலாம். ஒவ்வொரு விடைக்கும் ரூ.200 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இதற்கு மாணவர்கள் இன்று மற்றும் நாளை (ஜூன் 29 மற்றும் ஜூன் 30) இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணத்தைச் செலுத்த நாளை இரவு 11.50 மணி கடைசி ஆகும்.
தேர்வர்களின் ஆட்சேபனைகள் நிபுணர்கள் மூலம் பரிசீலிக்கப்படும். அவை சரியாக இருக்கும்பட்சத்தில் விடைக் குறிப்பில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, இறுதி விடைக் குறிப்பு வெளியிடப்படும் என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: 011- 40759000 அல்லது cuet-ug@nta.ac.in