CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
CUET UG Admit Card 2025: க்யூட் இளநிலைத் தேர்வு மே 13ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது.

கலை, அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் இளநிலைத் தேர்வு மே 13ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. இவர்களுக்கான தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள், ஏற்கெனவே மே 7ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது.
தேர்வு எப்போது?
க்யூட் இளநிலைத் தேர்வு மே 13ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த ஆண்டுக்கான க்யூட் இளநிலைத் தேர்வில் (CUET UG 2025) முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, கலப்பு முறையாக இருந்த தேர்வு முறை, இனி கணினி மூலம் (Computer-Based Test (CBT) Format)மட்டுமே நடைபெற உள்ளது.
அதேபோல 12ஆம் வகுப்பில் என்ன படித்திருந்தாலும், தேர்வு எழுதுவதற்கான பாடங்களை நெகிழ்வுத் தன்மையுடன் தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?
- க்யூட் தேர்வை எழுதும் மாணவர்கள் https://examinationservices.nic.in/examsys25/downloadadmitcard/LoginPWD.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFYsjZOdyj8DuPcxGBqAK2DwqFCalp/sPjeNMpmZAoiTR என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- அதில் விண்ணப்ப எண், பாஸ்வேர்டு, கேப்ட்ச்சா ஆகியவற்றை உள்ளீடு செய்யவும்.
- உடனே திரையில் ஹால் டிக்கெட் தோன்றும்
- அதைப் பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ளவும்.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், க்யூட் தேர்வை அனுமதித்த மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை கலை, அறிவியல் படிப்புகளில் சேர க்யூட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
Admit cards for CUET (UG)-2025 Scheduled from 13 May to 16 May 2025 are live now.candidate can download the admit cards. pic.twitter.com/XoXwe0Xd0S
— National Testing Agency (@NTA_Exams) May 10, 2025
13 மொழிகளில் 37 பாடங்களுக்கு நடத்தப்படும் தேர்வு
ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமையால் நடத்தப்படும் இந்தத் தேர்வு, 13 இந்திய மொழிகளில் நடக்கிறது. குறிப்பாக, தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. மேலும் தேர்வுக்கான மொத்த பாடங்களின் எண்ணிகை 63-ல் இருந்து 37 ஆகக் குறைக்கப்படுள்ளது.
மேலும் மாணவர்கள் https://cuet.nta.nic.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து கூடுதல் விவரங்களை அறியலாம்.
தொலைபேசி எண்: 011-40759000
இ மெயில் முகவரி: cuet-ug@nta.ac.in






















