மேலும் அறிய

CUET Exam 2023 : மாணவர்களே.. க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...விண்ணப்பிப்பது எப்படி...?

மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CUET Exam 2023 : மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்யூட் நுழைவுத்தேர்வு:

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக  பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் யு.ஜி.சி. சார்பில் வெளியிடப்பட்டது.  

அதன்படி இளநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி முதல் வாரம் தொடங்கப்பட்டது. இதேபோல் முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 மற்றும் 3வது வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

13 மொழிகளில் தேர்வு:

இளநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை ஜூன் 3 ஆம் வாரமும், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை  ஜூலையிலும்  வெளியிட்டு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க யுஜிசி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. 

இன்று கடைசி நாள்

இளங்களை பட்டப்படிப்புகளுக்கான க்யூட் தேர்வுக்கு பிப்ரவரி மாதம் முதல் விண்ணப்பம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இன்று இரவு 9.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்பதிவில் திருத்தங்கள் இருந்தால் வரும் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதிக்குள் திருத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், எந்தெந்த நகரங்களில் தேர்வுகள் நடைபெறும் என்ற விவரங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

  • முதலில் https://cuet.samarth.ac.in/என்ற இணையத்தை கிளிக் செய்யவும்.
  • முகப்பு பக்கத்தில் தோன்றும் CUET UG 2023 என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
  • அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • பின்னர், விண்ணப்பத்தை நிரப்பியவுடன் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  • பொது/ஓபிசி பிரிவினருக்கான கட்டணம் ரூ.700 மற்றும் மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமானது ரூ.650 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

பிரதமராக மோடி இல்லாத நாளில் தேசம் ஊழலற்றதாக மாறிவிடும்: போட்டுத்தாக்கிய கெஜ்ரிவால்

Minister Sivasankar Speech: போக்குவரத்துத்துறையில் பல முக்கிய அறிவிப்புகள்.. சட்டப்பேரவையில் வெளியிட்ட அமைச்சர் சிவசங்கர்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
Pongal Festival : டோட்டலாக காலியான சென்னை.! 4 நாட்களில் இத்தனை லட்சம் பேர் வெளியூர் பயணமா.? வெளியான லிஸ்ட்
டோட்டலாக காலியான சென்னை.! 4 நாட்களில் இத்தனை லட்சம் பேர் வெளியூர் பயணமா.? வெளியான லிஸ்ட்
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
Pongal Festival : டோட்டலாக காலியான சென்னை.! 4 நாட்களில் இத்தனை லட்சம் பேர் வெளியூர் பயணமா.? வெளியான லிஸ்ட்
டோட்டலாக காலியான சென்னை.! 4 நாட்களில் இத்தனை லட்சம் பேர் வெளியூர் பயணமா.? வெளியான லிஸ்ட்
Skoda Peaq EV: பீக் மூலம் விற்பனையில் பீக் வருமா? ஸ்கோடாவின் மின்சார 7 சீட்டர், 600KM ரேஞ்ச், யாருக்கு போட்டி?
Skoda Peaq EV: பீக் மூலம் விற்பனையில் பீக் வருமா? ஸ்கோடாவின் மின்சார 7 சீட்டர், 600KM ரேஞ்ச், யாருக்கு போட்டி?
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!
Salem: இனிக்க இனிக்க பேசிய இன்ஸ்டா காதலி.. ரூம் போட்டு கொலை செய்த கள்ளக்காதலன்!
Salem: இனிக்க இனிக்க பேசிய இன்ஸ்டா காதலி.. ரூம் போட்டு கொலை செய்த கள்ளக்காதலன்!
IndiGo Mega Sale: லைஃப் டைம் ஆஃபர்..! ரூ.1க்கு விமான டிக்கெட், உள்ளூர் தொடங்கி உலக டூர் - ரூ.4,499 மட்டுமே -ஜன.16 வரை
IndiGo Mega Sale: லைஃப் டைம் ஆஃபர்..! ரூ.1க்கு விமான டிக்கெட், உள்ளூர் தொடங்கி உலக டூர் - ரூ.4,499 மட்டுமே -ஜன.16 வரை
Embed widget