மேலும் அறிய
Minister Sivasankar Speech: போக்குவரத்துத்துறையில் பல முக்கிய அறிவிப்புகள்.. சட்டப்பேரவையில் வெளியிட்ட அமைச்சர் சிவசங்கர்!
சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை தொடர்பான மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் சிவசங்கர் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.
![Minister Sivasankar Speech: போக்குவரத்துத்துறையில் பல முக்கிய அறிவிப்புகள்.. சட்டப்பேரவையில் வெளியிட்ட அமைச்சர் சிவசங்கர்! Minister Sivasankar Assembly Speech Highlights SETC Ticket Price Offer on Ticket Price Key Announcements Minister Sivasankar Speech: போக்குவரத்துத்துறையில் பல முக்கிய அறிவிப்புகள்.. சட்டப்பேரவையில் வெளியிட்ட அமைச்சர் சிவசங்கர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/df714bbece1fa724a65b1678de7405ef1680094731646571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
போக்குவரத்துத்துறை தொடர்பான மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் சிவசங்கர் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அவை பின்வருமாறு;
- அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணிக்கும் பயணிகளுக்கு 50% சலுகை
- அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கென நான்கு இருக்கைகள் பிரத்யேகமாக ஒதுக்கப்படும்
- பேருந்து பணிமனைகளில் உணவகங்கள் நடத்த மகளிர் சுய உதவி குழுக்கள் முன் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
- 18 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கனரக போக்குவரத்து வாகனங்களுக்கு தரச்சான்று வழங்க தானியங்கி சோதனை நிலையங்கள் அமைக்கப்படும்
- இணைய வழியில் பொதுமக்களுக்கு சேவைகள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆதார் அட்டையை பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு தொடர்பான 42 சேவைகளை பொதுமக்கள் இணைய வழியில் பெறலாம்.
- சாலை விபத்தில் காயம் அடைந்த நபர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களுக்கு ( Good Samaritan) ரூ.5000 வழங்கப்படும்.
- ரூ.10 கோடியில் ஓட்டுநர் தேர்வு தளம் 20 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளங்கள் அமைக்கப்படும்.
- சொந்த வாகனம் இல்லாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வு நடத்தும் பொருட்டு வட்டாரப் போக்குவரத்து/ பகுதி அலுவலகங்களுக்கு 145 இலகு ரக வாகனங்கள் வாங்கிட ரூ. 6.25 கோடி ஒதுக்கீடு.
- ரூ.87 லட்சத்தில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும்
- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.16.19 கோடியில் பணிமனைகள் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மற்றும் பாடியநல்லூர் பேருந்து நிலையம் மற்றும் பணிமனைகள் மேம்படுத்தப்படும்.
- பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் ரூ.3.55 கோடியில் புதிய பணிமனை அமைக்கப்படும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion