UGC NET 2024: உதவித்தொகை, பிஎச்.டி. சேர்க்கை; யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! எப்படி?
CSIR UGC NET December 2024: சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி என்னும் நிலையில், அதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை பெறவும் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கும் பிஎச்.டி. படிப்பில் சேரவும் சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் கூட்டு நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாத அமர்வுக்கான சிஎஸ்ஐஆர் யுஜிசி கூட்டு நுழைவுத் தேர்வு பிப்ரவரி 16 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு
இதற்கான விண்ணப்பப் பதிவு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கிய நிலையில், டிசம்பர் 30ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பித்தனர். அதேபோலத் தேர்வர்கள் டிச.31 வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தினர். தொடர்ந்து தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க விண்ணப்பிக்கும் அவகாசம் ஜனவரி 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த நாளை (ஜனவரி 3) கடைசி ஆகும். ஜனவரி 4 முதல் 5ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
- தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- அதற்கு முதலில் https://csinet.nta.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
- கேட்கப்பட்டிருக்கும் தேவையான விவரங்களை உள்ளிட வேண்டும்.
- அல்லது https://csirnetdec2024.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்தும் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பக் கட்டணத்தை டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யுபிஐ முலம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
- அதன் பிறகு விண்ணப்பித்து விடலாம்.
- தேர்வர்கள் ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டியதும் முக்கியம்.
தொலைபேசி எண்கள்: 011- 40759000 அல்லது 011-69227700
இ- மெயில் முகவரி: csirnet@nta.ac.in
முழுமையான விவரங்களை அறிய: https://csirnet.nta.ac.in , www.nta.ac.in