Cognizant Campus Recruitment : காக்னிசன்ட் வேலைவாய்ப்பு: பொறியியல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், இந்தியாவில் 2022 கல்வியாண்டு மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், இந்தியாவில் 2022 கல்வியாண்டு மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் பதிவுசெய்வதற்கான இணையதள முகவரி கல்லூரி TOP மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்படும். விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் தங்களது பயனாளர் கணக்கை தொடங்கி, அதன் பிறகு மின்னஞ்சலில் வரக்கூடிய தகவலின் அடிப்படையில், விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்யவேண்டும்.
மாணவர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய சுய விவரக் குறிப்பு, கல்லூரி ஐடி கார்டு, பள்ளி-கல்லூரி சான்றிதழ், அடையாள ஆவணங்கள் (ஆதார் அட்டை, பாஸ்போர் அல்லது பான் அட்டை) உள்ளிட்ட ஆவணங்களை தங்களது கணக்குகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பணி: Advanced Java/DotNet/Python Developer, Full Stack Software Engineer (Java/DotNet), Digital User Experience Engineer, IoT Engineer (Java/DotNet) Data Scientist, Advanced C and UNIX Developer, AWS Infra Developer
Google Engineer, Cybersecurity
யார் விண்ணபிக்கலாம்: 2022 கல்வியாண்டைச் சேர்ந்த பி.இ / பி.டெக் / எம்.டெக் / எம்.சி.ஏ / எம்.எஸ்.சி ஐடி மாணவர்கள் ( இஇஇ, இசிஇ,சிஎஸ்இ, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்ப அறிவியல் மற்றும் தொடர்புடைய படிப்புகள்)
12ம் வகுப்பு, டிப்ளோமா, யுஜி, பிஜி என அனைத்து கல்விப் பிரிவிலும் 60% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அரியர் மற்றும் 2 வருடங்களுக்கும் அதிகமான கல்வி இடைவெளி உள்ள மாணவர்கள் விண்ணபிக்க தகுதி பெற மாட்டார்கள். இந்திய குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மாத சம்பளம்: ஆண்டு ஊதியம் ரூ.5.75 லட்சம் வரை
தேர்வு முறை: திறன் அடிப்படையிலான தேர்வு/ ஹெச்ஆர் நேர்முகத் தேர்வு
காக்னிசன்ட் டெக்னாலஜி:
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தை தலைமையகமாக கொண்டுள்ள போதும் பெரும்பாண்மையான காக்னிசன்ட் நிறுவன ஊழியர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவில் சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர், ஹைதரபாத், கொல்கத்தா, மும்பை, புனே மற்றும் கொச்சியில் அலுவலகங்களை கொண்டுள்ளது. மேலும் சீனாவின் ஷாங்காய் நகரிலும் ஆம்ஸ்டர்டாமிலும் வளர்மையங்களை கொண்டுள்ளது. இன்ஃபோசிஸ், சத்யம். சீமென்ஸ், விப்ரோ, அரிசன்ட் முதலிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் காக்னிசன்ட் நிறுவனத்திற்கு போட்டியாளர்களாக கருதப்படுகின்றன.
மேலும், வாசிக்க:
NABARD Recruitment : நபார்டு வங்கியில் 168 காலி பணியிடங்கள், ஆகஸ்ட் 17ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்..!
வேலைவாய்ப்புக்கு உகந்த புதிய பாடத்திட்டம்: முதல்வர் தலைமையில் ஆய்வு