NABARD Recruitment : நபார்டு வங்கியில் 168 காலி பணியிடங்கள், ஆகஸ்ட் 17ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்..!
2 ஜூலை 1991 முதல் 1 ஜூலை 2000 வரை (இரு தேதிகளும் உட்பட) பிறந்து 21- 30 வயதுகுட்பட்ட தனிநபர்கள், இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்
உதவி மேலாளர் மற்றும் மேலாளர் பதவிக்கான ஆள் சேர்க்க அறிவிப்பை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ், உதவி மேலாளர் பிரிவில் 148 பணியிடங்களும், மேலாளர் பிரிவில் 20 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. உதவி மேலாளர் பணி: 2 ஜூலை 1991 முதல் 1 ஜூலை 2000 வரை (இரு தேதிகளும் உட்பட) பிறந்து 21- 30 வயதுகுட்பட்ட தனிநபர்கள், இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இடஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் உள்ளன. அமலில் இருக்கும் அரசுக் கொள்கைகளுக்கு ஏற்ப எஸ்.சி. / எஸ்.டி. (5 ஆண்டு ) / ஓ.பி.சி (3 ஆண்டு)/ மாற்றுத் திறனாளி (10 ஆண்டு) விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு அளிக்கப்படும்.
மேலாளர் பணி: 01-07-2021 அன்றைய தேதியில், 32 வயதுகுட்பட்ட தனிநபர்கள், இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள், பொறியியல் படிப்புகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரகள் 55% மதிப்பெண்கள் பெற வேண்டும். மேலும், சமந்தப்பட்ட துறைகளில் முன்பனி அனுபவம் முக்கியமானதாகும்.
www.nabard.org என்ற இணையதளம் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் தங்களது பயனாளர் கணக்கை தொடங்கி, அதன் பிறகு மின்னஞ்சலில் வரக்கூடிய தகவலின் அடிப்படையில், விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் தங்களது கணக்குகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து வைத்த விண்ணப்பதாரர்கள், இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கும்போது ஏற்படும் நெரிசலில் சிக்காமல் விரைவாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இருகட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள், அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன்பின், பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் அறிவிக்கப்படும். கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள www.nabard.org என்ற இணையதளத்தைக் காணவும்.
உதவி மேலாளர் பணிக்கான முதல்நிலைத் தேர்வு:
மேலாளர் பணிக்கான முதல்நிலைத் தேர்வு:
விண்ணப்பிக்கும் தேதி: இப்பணிக்கு 2021 ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலாளர் பணி விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 800 ரூபாயாகவும், எஸ்.சி / எஸ்.டி/ மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு 150 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் திருப்பிச் தரப்படமாட்டாது; எந்தவொரு வங்கி அல்லது கட்டண நுழைவாயில் சேவை கட்டணங்களையும் விண்ணப்பதாரரே ஏற்க வேண்டும்.
உதவி மேலாளர் விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 750 ரூபாயாகவும், எஸ்.சி / எஸ்.டி/ மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு 100 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலாளர் மாத ஊதியம்: குறைந்தபட்சம் ரூ. 78,000 வரை
உதவி மேலாளர் ஊதியம் : குறைந்தபட்ச ஊதியம் ரூ. 70,000 வரை