CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. எப்படி காண்பது உள்ளிட்ட விவரங்களை காணலாம்.
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (The Central Board of Secondary Education (CBSE)) வெளியிட்டுள்ளது. கடந்தாண்டைவிட இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் சற்றே அதிகரித்திருக்கிறது.
இந்தாண்டு நடைபெற்ற தேர்வில் 87.98 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 0.65% அதிகம் ஆகும். 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை 2023ஆம் ஆண்டு, 14,50174 மாணவர்கள் எழுதியிருந்தனர்.24,000 மாணவர்கள் 95% மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர். ஒரு லட்சத்து 16 ஆயிரம் மாணவர்கள் 90 சதவீதம் மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர்.
தேர்வு முடிவுகளை காண்பது எப்படி?
மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்திபதிவு எண் ('Enter your Roll Number’), பள்ளியின் பெயர் (Enter School No.), அட்மிட் கார்ட் ஐ.டி. (Enter Admit Card ID) ஆகிய விவரங்களை பதிவிட்டு முடிவுகளை காணலாம்.
- https://cbseresults.nic.in/
- https://cnr.nic.in/ResultDir/class_xii_a_2024/ClassTwelfth_c_2024.htm
- https://cnr.nic.in/ResultDir/class_xii_a_2024/ClassTwelfth_c_2024.htm
- https://cbseresults.nic.in/class_xiith_a_2024/ClassTwelfth_c_2024.htm
- https://www.digilocker.gov.in/
- https://results.gov.in/
12-ம் வகுப்பு 'Supplementary' தேர்வு வரும் ஜூலை 15-ம் நடைபெற உள்ளது என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.