மேலும் அறிய

Annamalai University: அண்ணாமலை பல்கலை.யில் பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுப்பதா? எழும் கேள்வி

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட். பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுப்பதா என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட். பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுப்பதா என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை இலக்கியம் (பி.லிட்) படித்து தேர்ச்சி பெற்றவர்களை, அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றும் வேலை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டம், பி.ஏ (தமிழ் இலக்கியம்) படிப்புக்கு இணையானது அல்ல என்று நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நோக்குடன் 394 தமிழாசிரியர்கள் உள்ளிட்ட 2222 ஆசிரியர்களை போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை கடந்த 25.10.2023 அன்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. பின்னர் பணியிடங்களின் எண்ணிக்கை 518 தமிழாசிரியர்கள் உட்பட மொத்தம் 3192 என அதிகரிக்கப் பட்டது.

தற்காலிக தெரிவுப் பட்டியல்

இந்த பணிகளுக்கான போட்டித்தேர்வு கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு ஆகஸ்ட் 24ஆம் நாள் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழாசிரியர் பணிக்கு 518 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 164 பேரின் தேர்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்கள்.

ஒருதலைப்பட்சமான முடிவு

அந்தப் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு அடிப்படைத் தகுதியான பி.ஏ. தமிழ் இலக்கியம் பட்டத்திற்கு இணையானது இல்லை என்பதால் அவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது.  இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத, சமூகநீதிக்கு எதிரான, ஒருதலைப்பட்சமான முடிவாகும்.

சென்னையில் கடந்த 11.04.2023 அன்று நடைபெற்ற தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்தின் சமத் தகுதி நிர்ணயக் குழுவின் கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.லிட் பட்டம் பி.ஏ. (தமிழ் இலக்கியம்) படிப்புக்கு இணையானது அல்ல என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதைக் காரணம் காட்டி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இம்முடிவு இரு வகைகளில் தவறு.

முதலாவதாக, 06.09.2012 அன்று நடைபெற்ற சமத் தகுதி நிர்ணயக்குழு கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.லிட் பட்டம் வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட். தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையானது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கிய பட்டத்திற்கு இணையானவையே

அதன்பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சமத்தகுதி நிர்ணயக்குழு கூட்டத்தில்தான் அண்ணாமலை பல்கலைக்கழக பி.லிட் பட்டம், பி.ஏ., தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையானது அல்ல என தீர்மானிக்கப் பட்டுள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் பெறப்பட்ட பி.லிட் பட்டங்கள் அனைத்தும் சென்னை பல்கலையின் பி.லிட். தமிழ் இலக்கிய பட்டத்திற்கு இணையானவையாகவே கருதப்பட வேண்டும். அந்த வகையில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்ற அனைவரும் தமிழாசிரியராக நியமிக்கப்பட தகுதியானவர்கள்தான்.

இரண்டாவதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 25.10.2023 அன்று வெளியிடப்பட்ட ஆள்தேர்வு அறிவிக்கையின் 38ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள நான்காவது இணைப்பில் வரிசை எண் இரண்டில்  அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பி.லிட் பட்டங்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டத்திற்கு இணையானவை என 20.09.2012 தேதியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானது எனும்போது, அண்ணாமலை பல்கலை. பி.லிட் பட்டமும் தகுதியானதுதான்.

மிகப்பெரிய சமூக அநீதி

இவை இரண்டையும் கடந்து பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கான பாடத்திட்டத்தில் உள்ள 70& 80% பாடங்களைக் கொண்ட எந்த படிப்பும் பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கு இணையானதாகவே பார்க்கப்பட வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்கள், அதை அடிப்படைத் தகுதியாகக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர்; அதைத் தொடர்ந்து ஆசிரியர் வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தமிழாசிரியர் ஆக தகுதி பெற்றுள்ளனர். இத்தகைய சூழலில் பொருந்தாத காரணங்களைக் கூறி 164 பட்டதாரி ஆசிரியர்களின் வேலைவாய்ப்பை பறிப்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த அநீதியை களைய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.

எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெறப்பட்ட பி.லிட். பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானதுதான் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இது தொடர்பான வழிகாட்டுதல்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்துடன் இணைந்து உயர் கல்வித்துறை வழங்க வேண்டும், அதன்மூலம் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.லிட் பட்டதாரிகள் 164 பேருக்கும் தமிழாசிரியர் பணி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CJI DY Chandrachud: கடமை ஓவர், இன்றுடன்  விடை பெறுகிறார் தலைமை நீதிபதி சந்திரசூட் - தடாலடியாக வழங்கிய தீர்ப்புகள்
CJI DY Chandrachud: கடமை ஓவர், இன்றுடன் விடை பெறுகிறார் தலைமை நீதிபதி சந்திரசூட் - தடாலடியாக வழங்கிய தீர்ப்புகள்
அம்பேத்கரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள் - ராமதாஸ்
அம்பேத்கரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள் - ராமதாஸ்
இளைஞர்கள்தான் குறி.... பொது இடங்களில் விற்பனை படு ஜோர் - காவல்துறை ந‌ட‌வ‌டிக்கை எடுக்குமா..?
இளைஞர்கள்தான் குறி.... பொது இடங்களில் விற்பனை படு ஜோர் - காவல்துறை ந‌ட‌வ‌டிக்கை எடுக்குமா..?
Kanguva: கோலிவுட்டின் தீராத ஏக்கம்! தமிழின் முதல் பான் இந்தியா வெற்றியைப் பெறுமா கங்குவா?
Kanguva: கோலிவுட்டின் தீராத ஏக்கம்! தமிழின் முதல் பான் இந்தியா வெற்றியைப் பெறுமா கங்குவா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்Kash Patel : ட்ரம்ப் டிக்கடித்த CIA CHIEF..குஜராத்காரன்.. மோடியின் விசுவாசி! யார் இந்த காஷ் பட்டேல்?NTK Cadres Fight : ‘’ஏய்..நீ வெளிய போடா!’’நாதக நிர்வாகிகள் கடும் மோதல்! போர்க்களமான PRESSMEET

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJI DY Chandrachud: கடமை ஓவர், இன்றுடன்  விடை பெறுகிறார் தலைமை நீதிபதி சந்திரசூட் - தடாலடியாக வழங்கிய தீர்ப்புகள்
CJI DY Chandrachud: கடமை ஓவர், இன்றுடன் விடை பெறுகிறார் தலைமை நீதிபதி சந்திரசூட் - தடாலடியாக வழங்கிய தீர்ப்புகள்
அம்பேத்கரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள் - ராமதாஸ்
அம்பேத்கரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள் - ராமதாஸ்
இளைஞர்கள்தான் குறி.... பொது இடங்களில் விற்பனை படு ஜோர் - காவல்துறை ந‌ட‌வ‌டிக்கை எடுக்குமா..?
இளைஞர்கள்தான் குறி.... பொது இடங்களில் விற்பனை படு ஜோர் - காவல்துறை ந‌ட‌வ‌டிக்கை எடுக்குமா..?
Kanguva: கோலிவுட்டின் தீராத ஏக்கம்! தமிழின் முதல் பான் இந்தியா வெற்றியைப் பெறுமா கங்குவா?
Kanguva: கோலிவுட்டின் தீராத ஏக்கம்! தமிழின் முதல் பான் இந்தியா வெற்றியைப் பெறுமா கங்குவா?
Breaking News LIVE 8th Nov 2024: மனோரா கடற்கரையில் ₹15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு.
Breaking News LIVE 8th Nov 2024: மனோரா கடற்கரையில் ₹15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு.
VCK: திருமாவிற்கு அடுத்து ஆதவ் அர்ஜூனாவா? ஆதங்கத்தில் விசிக மூத்த தலைவர்கள்!
VCK: திருமாவிற்கு அடுத்து ஆதவ் அர்ஜூனாவா? ஆதங்கத்தில் விசிக மூத்த தலைவர்கள்!
Dhanush: டபுள் டமாக்கா! இட்லி கடை ரிலீஸ் தேதி, அமரன் பட இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் - குஷியில் ரசிகர்கள்
Dhanush: டபுள் டமாக்கா! இட்லி கடை ரிலீஸ் தேதி, அமரன் பட இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் - குஷியில் ரசிகர்கள்
Cuddalore VCK PMK: கொதிக்கும் கடலூர் - முற்றும் பாமக & விசிக மோதல், மஞ்சக்கொல்லையில் நவ.1ல் நடந்தது என்ன?
Cuddalore VCK PMK: கொதிக்கும் கடலூர் - முற்றும் பாமக & விசிக மோதல், மஞ்சக்கொல்லையில் நவ.1ல் நடந்தது என்ன?
Embed widget