2021 நீட் PG தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியானது.. முழு விவரங்கள் இங்கே..

போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் இருந்தாலும் தேர்வு எழுதுவோர் இ- பாஸ் மூலம் பயணிக்க முடியும்..

FOLLOW US: 

மருத்துவ முதுநிலை படிப்புக்கான அகில இந்திய நீட் PG 2021 ஆண்டு தேர்வுக்கான அட்மிட் கார்டை தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டது. நீட் PG 2021 தேர்வு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும். நீட் (PG) என்பது எம்.டி / எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளோமா படிப்புகளுக்கான ஒற்றைத்தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாகும். 

தேர்வு எழுதுவோர் தங்கள் அனுமதி அட்டையைப் பதிவிறக்கம் செய்து அச்சுப்பிரதியை எடுத்துவைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அச்சுப்படியைத் தேர்வெழுதுவதற்காகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வரும்போது கொண்டுவந்து காட்டவேண்டும். natboard.edu.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து அட்மிட் கார்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

அட்மிட் கார்டுடன் இ- பாஸ்  அனுமதிச் சீட்டையும் தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் இருந்தாலும் தேர்வு எழுதுவோர் இ- பாஸ் மூலம் பயணிக்க  முடியும். மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

கைபேசி (அணைக்கப்பட்ட நிலையிலும்), பேஜர் அல்லது வேறெந்த மின்னணுச் சாதனமும் அல்லது பென்டிரைவ், திறன் கடிகாரங்கள் போன்றவை அல்லது வேறெந்த இது போன்ற தொடர்புச்சாதனங்களும் கால்குலேட்டர்களும் செயல்படும் நிலையில் அல்லது அணைத்துவைக்கப்பட்ட நிலையிலும் கூட தேர்வறையில் அனுமதிக்கப்படமாட்டாது. கடைசிநேர நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக மின்னணு அனுமதி அட்டையின் அச்சுப்பிரதியை முன்கூட்டியே எடுத்துவைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags: NEET PG 2021 Exam NEET PG Exam Hall ticket NEET PG 2021 link natboard.edu.in PG medical aspirants NEET PG Exam Hall Ticket official Download NEET PG 2021 Exam E Pass

தொடர்புடைய செய்திகள்

விதிகளின் படி மாணவர்கள் சேர்க்கை; பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

விதிகளின் படி மாணவர்கள் சேர்க்கை; பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

TN Class 11 Admissions: பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடக்கம்

TN Class 11 Admissions: பிளஸ் 1 மாணவர் சேர்க்கை  தொடக்கம்

CBSE Class 12 : சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் எப்போது வெளியாகும்?

CBSE Class 12 : சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் எப்போது வெளியாகும்?

Madras High Court Recruitment 2021: எட்டாம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்.. நீதித்துறையில் 3557 பணியிடங்கள் காலி!

Madras High Court Recruitment 2021: எட்டாம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்.. நீதித்துறையில் 3557 பணியிடங்கள் காலி!

UPSC தேர்வில் வெல்வது எப்படி? - டிப்ஸ் சொல்கிறார் சிருஷ்டி ஜெயந்த் தேஷ்முக்..!

UPSC தேர்வில் வெல்வது எப்படி? - டிப்ஸ் சொல்கிறார் சிருஷ்டி ஜெயந்த் தேஷ்முக்..!

டாப் நியூஸ்

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Tamil Nadu Coronavirus LIVE News : இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Tamil Nadu Coronavirus LIVE News :  இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!