மேலும் அறிய

12th Answer Sheet: பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்: இன்று முதல் டவுன்லோடு செய்யலாம்- எப்படி?

பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் நகலை மாணவர்கள் இன்று (வியாழக் கிழமை) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் நகலை மாணவர்கள் இன்று (வியாழக் கிழமை) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதேபோல மாணவர்கள் மறுகூட்டல்‌-॥ அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.‌

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

’’பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் 14ஆம் தேதி (இன்று) முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Notification பக்கத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மே 2022, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வு எழுதி விடைத்தாள்‌ நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின்‌ விடைத்தாட்கள்‌ நகலினை 14.07.2022 (வியாழக்கிழமை நண்பகல்‌ 12.00 மணி முதல்‌  www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச்‌ சென்று Notification-ஐ Click செய்ய வேண்டும். உடனே ‌HSE Second Year Exam, MAY 2022 - Scripts Download என்ற வாசகத்தினை Click செய்தால்‌ தோன்றும்‌ பக்கத்தில்‌ தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினைப்‌ பதிவு செய்து தாங்கள்‌ விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின்‌ நகலினைப்‌ பதிவிறக்கம்‌
செய்து கொள்ளலாம்‌.

விடைத்தாள்களின்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறுகூட்டல்‌ - ॥ அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால்‌, இதே இணையதள முகவரியில்‌ “Application for Retotalling/Revaluation” என்ற தலைப்பினை Click செய்து வெற்று விண்ணப்பத்தினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டும்‌.

தேர்வர்கள்‌ இவ்விண்ணப்பப்‌ படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள்‌ எடுத்து 15.07.2022 (வெள்ளிக்கிழமை நண்பகல்‌ 12.00 மணி முதல்‌ 19.07.2022 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.00 மணிக்குள்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநார்‌ அலுவலகத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌. மறுகூட்டல்‌ மற்றும்‌ மறுமதிப்பீட்டிறகான கட்டணத்தினை மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும்‌ மயிலாடுதுறை மாவட்டங்களில்‌ மறுகூட்டல்‌ - || அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தேர்வர்கள்‌ சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகத்தில்‌ விண்ணப்பப்‌ படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத்‌ தொகையைப் பணமாக செலுத்த வேண்டும்‌.

மறுமதிப்பீடு

பாடம்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ. 505/-

மறுகூட்டல்‌-॥

உயிரியல்‌ பாடம்‌ மட்டும்‌ - ரூ.305/-
ஏனைய பாடங்கள்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ.205/-’’

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாம்: கல்லூரிகளில்‌ 1060 விரிவுரையாளர்‌ காலிப் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget