மேலும் அறிய

கல்லூரிகளில்‌ 1060 விரிவுரையாளர்‌ காலிப் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு

அரசு பல் தொழில்நுட்பக்‌ கல்லூரிகளில்‌ 1,060 விரிவுரையாளர்‌ காலிப் பணியிடங்களுக்கு, ஜூலை 14 முதல் அழைப்புக்‌ கடிதம்‌ மற்றும்‌ ஆளறிச்‌ சான்றிதழ்‌ படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அரசு பல் தொழில்நுட்பக்‌ கல்லூரிகளில்‌ 1,060 விரிவுரையாளர்‌ காலிப் பணியிடங்களுக்கு, ஜூலை 14 முதல் அழைப்புக்‌ கடிதம்‌ மற்றும்‌ ஆளறிச்‌ சான்றிதழ்‌ படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான அரசு‌ பல் தொழில்நுட்பக்‌ கல்லூரிகளில்‌ 1060 விரிவுரையாளர்‌ காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்‌ மூலம்‌ பணித்தெரிவு செய்வது சார்ந்து ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ அறிவிக்கை 27.11.2019 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு, கணினி வழித்‌ தேர்வுகள்‌ 08.12.2021 முதல்‌ 13.12.2021 வரை நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள்‌ 08.03.2022 அன்று ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌
வெளியிடப்பட்‌டன.

11.03.2022 நாளிட்ட ஆசிரியர்‌ தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில்‌, பணிநாடுநர்கள்‌ தங்களது கல்வித்‌ தகுதி மற்றும்‌ பணி அனுபவம்‌ தொடர்பான கூடுதல்‌ சான்றிதழ்களை/ ஆவணங்களை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளம்‌ வழியாக 11.03.2022 முதல்‌ 01.04.2022 வரை பதிவேற்றம்‌ செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

பணிநாடுநர்கள்‌ விண்ணப்பத்துடன்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்கள்‌, ஆவணங்கள்‌ மற்றும்‌ கூடுதலாக பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்கள்‌/ ஆவணங்களின்‌ அடிப்படையில்‌ பணிநாடுநர்களின்‌ விவரங்கள்‌ சரிபார்க்கப்பட்டு, அறிவிக்கையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள 15 பாடப் பிரிவுகளுக்கு 1:2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கான பட்டியல்‌ தயார்‌ செய்யப்பட்டு, ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்‌ மீது பெறப்பட்ட ஆட்சேபனைகள்‌ மீதும்‌ ஆணைகள்‌ பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது, முதற்கட்டமாக Textile Technology, Production Engineering, Printing Technology, Physics, Chemistry, English மற்றும் Mathematic ஆகிய பாடங்களில்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்புப்‌ பட்டியலில்‌ இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு 16.07.2022 தேதியில்‌ நேரடி சான்றிதழ்‌ சரிபார்ப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற பாடங்களுக்கு 17.07.2022 மற்றும்‌ 18.07.2022 தேதிகளில்‌ நடத்தப்படும்‌. பாடங்கள்‌ குறித்த விவரம்‌ தெரிவிக்கப்படும்‌. 

பணிநாடுநர்களுக்கான அழைப்புக்‌ கடிதம்‌ மற்றும்‌ ஆளறிச்‌ சான்றிதழ்‌ படிவம்‌ ஆகியவை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது. பணிநாடுநர்கள்‌ தங்களது அழைப்புக்‌ கடிதம்‌ மற்றும்‌ ஆளறிச்‌ சான்றிதழ்‌ படிவம்‌ ஆகியவற்றை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து 14.07.2022 முதல்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்படுகிறது. 

கல்லூரிகளில்‌ 1060 விரிவுரையாளர்‌ காலிப் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு

இது குறித்த குறுஞ்செய்தி மற்றும்‌ மின்னஞ்சல்‌ மூலம்‌ பணிநாடுநர்களுக்குத் தகவல்‌ அளிக்கப்படும்‌. அழைப்புக்‌ கடிதம்‌ பிற வழிகளில்‌ அனுப்பி வைக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

பல்தொழில்நுட்பக்‌ கல்லூரி விரிவுரையாளர்‌ பணிநாடுநர்கள்‌ தொடர்ந்து ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளம்‌ மற்றும்‌ பத்திரிக்கைச்‌ செய்தியினை தொடர்ந்து கவனித்து வருமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்‌.

இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

இதையும் வாசிக்கலாம்:  எந்தக் கல்லூரி டாப்? - 481 பொறியியல் கல்லூரி தரவரிசையை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம் 

*

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ENG Semi Final LIVE Score: இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி.. மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
IND vs ENG Semi Final LIVE Score: இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி.. மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG Semi Final LIVE Score: இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி.. மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
IND vs ENG Semi Final LIVE Score: இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி.. மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
Embed widget