11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
11th Supplementary Exam Time Table 2024 Tamil Nadu: பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளன.
![11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல் 11th Supplementary Exam Date 2024 Tamil Nadu HSC Supplementary Exam 2024 Time Table 11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/14/15cd03aea64bafab5bfbb590f0212dba1715665136101332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைத் தற்போது அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட நிலையில், மொத்தம் 91.17% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளன. ஏற்கெனவே தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
8.83 சதவீதம் பேர் தோல்வி
11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 8,11,172 பேர் எழுதிய நிலையில், தேர்வில் 7,39,539 (91.17% ) பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது, 4.04 லட்சம் மாணவிகள் மற்றும் 3.35 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 8.83 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் 7.43 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளன. ஏற்கெனவே தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அட்டவணையை அறிந்துகொள்ளலாம்.
அதேபோல மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்கள், மே 15ஆம் தேதி முதல் மறுகூட்டல் அல்லது விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மே 17ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றி
அதேபோல மாணவர்கள் மே 17ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தை பார்க்கும்போது கோவை மாவட்டம் முதலிடமும், ஈரோடு இரண்டாமிடமும், திருப்பூர் மூன்றாமிடமும் பெற்றுள்ளது. கடைசியிடம் வேலூர் மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது. இந்த தேர்வுகளை 8,221 மாற்றுத்திறனாளி மாணவர், மாணவியர்கள் எழுதிய நிலையில் அதில் 7,504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 187 சிறைவாசிகள் தேர்வெழுதி 170 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் பாட வாரியாக மாணவர்கள் பெற்ற தேர்ச்சி விகிதம் பற்றி காணலாம்.
பாடப்பிரிவுகள் வாரியாக தேர்ச்சி விகிதம்
பாடப்பிரிவுகள் | தேர்ச்சி விகிதம் |
அறிவியல் | 94.31% |
வணிகவியல் | 86.93% |
கலைப்பிரிவுகள் | 72.89% |
தொழிற்பாட பிரிவுகள் | 78.72% |
முன்னதாக கடந்த மே 6 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும், மே 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகியிருந்தன. தொடர்ந்து இன்று (மே 14) 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)