மேலும் அறிய

கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

கரூரில் திருமணத்திற்கு மீறிய உறவால் கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 26. இவரது மனைவி காயத்ரி தேவி வயது 25. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், காயத்ரி தேவி அவ்வப்போது கரூர் மாவட்டம், மன்மங்கலம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த உறவினரான கமலக்கண்ணன்(29) என்பவருக்கும் காயத்ரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

 
இது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இதை அறிந்து மணிகண்டன், மனைவி காயத்ரியை கண்டித்துள்ளார். இது குறித்து காயத்ரி தேவி கமலக்கண்ணனிடம் தெரிவித்துள்ளார். மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கமலக்கண்ணன் மணிகண்டனை மது அருந்துவதற்காக கரூர் மணல்மேடு பகுதிக்கு கமலக்கண்ணன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்தி கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

இதில் அங்கிருந்த கட்டை மற்றும் கற்களைக் கொண்டு மணிகண்டனை தாக்கி கமலக்கண்ணன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். மணிகண்டன் உடலை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் மணிகண்டனின், மனைவி காயத்ரி தேவியின் தூண்டுதலின் பேரில் கமலக்கண்ணன், மணிகண்டனை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், இந்த கொலைக்கு ரூபன் என்பவர் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை


இந்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் மணிகண்டனை கொலை செய்ய திட்டம் தீட்டிய காயத்ரி தேவி மற்றும் கொலை செய்த கமலக்கண்ணன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், மேலும், இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபதாரம் விதித்தும், அவதாரத்தை கட்ட தவறினால் மேலும், ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பை அளித்தார். 

 

 


கரூர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி: பரிதவிக்கும் பெண் குழந்தை

மேலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரூபன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். காதல் மோகத்தால் கணவனை மனைவியே கொலை செய்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது என தெரிந்ததால் நீதிமன்ற வளாகத்தில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் அருகே திருமணத்திற்கு மீறிய உறவால் ஏற்பட்ட விளைவின் கணவனை கொன்ற மனைவி மற்றும் காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பை சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Crime: டெலிவரி பாயுடன் தொடர்பு.. தடம் மாறிய தாய்.. கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்!
Crime: டெலிவரி பாயுடன் தொடர்பு.. தடம் மாறிய தாய்.. கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்!
அடங்காத ரவுடிகள்... அசராத எஸ்பி சினேஹா ப்ரியா! அலறும் குற்றவாளிகள்!  
அடங்காத ரவுடிகள்... அசராத எஸ்பி சினேஹா ப்ரியா! அலறும் குற்றவாளிகள்!  
கட்டில் கால் என இழுத்த தொழிலாளர்கள்.. வெளியே வந்த பெண்ணின் சடலம்.. காலி நிலத்தில் பயங்கரம்!
கட்டில் கால் என இழுத்த தொழிலாளர்கள்.. வெளியே வந்த பெண்ணின் சடலம்.. காலி நிலத்தில் பயங்கரம்!
கஞ்சா விற்ற தாய்... உதவி செய்த மகன்... தூக்கி உள்ளே வைத்த மயிலாடுதுறை எஸ்பி..!
கஞ்சா விற்ற தாய்... உதவி செய்த மகன்... தூக்கி உள்ளே வைத்த மயிலாடுதுறை எஸ்பி..!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Embed widget