Telengana | 'வேலை வாங்கி தர்றோம்’ - கூட்டுப் பாலியல் வன்கொடுமையை வீடியோ எடுத்து மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பிய கொடூரர்கள்..
தெலங்கானாவில் பெயிண்டிங் வேலை செய்யும் இருவர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மகபூப் நகரில் இருக்கும் டிடி குட்டா அருகே ராஜேந்தர் ரெட்டி என்கிற ராஜுவும் (35), ஆஞ்சநேயுலு (27) ஆகிய இருவரும் பெயிண்டிங் வேலை செய்துவருகின்றனர். இவர்கள் இரண்டு பேரும் கடந்த நவம்பர் ஐந்தாம் தேதி வேலை செய்துகொண்டிருந்த பெண்ணிடம் நல்ல ஊதியத்திற்கு வேலை வாங்கி தருவதாக பொய் வாக்குறுதி அளித்தனர்.
அவர்களது சதித்திட்டத்தை அறியாத அப்பெண் அவர்களுடன் இருசக்கர வானகனத்தில் சென்றார். அப்பெண்ணை ஃபதேபூர் மைசம்மா காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்ற அவர்கள் குடிபோதையில் அவரை பாலியல் வன்கொடுமை செய்தனர். அதனை வீடியோவாகவும் தங்களது மொபைலில் பதிவு செய்தனர்.
இதற்கிடையில், நவம்பர் 18ஆம் தேதி நடக்கவிருந்த அந்தப் பெண்ணின் திருமணத்தை கெடுக்கும் முயற்சியில், இருவரும் நவம்பர் 10ஆம் தேதி அந்த வீடியோவை அவரது வருங்கால கணவருக்கும் அனுப்பிவைத்தனர்.
சுடிதார்.. புடவை.?ஆசிரியர்கள் என்ன ட்ரெஸ் அணியணும் - குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த கேரளா!
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் தரப்பினர் இதுதொடர்பாக காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்கும் பணி காவல் துறையினரால் முடுக்கிவிடப்பட்டது.
அதன்படி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ராஜுவையும், ஆஞ்சநேயுலுவையும் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) டிடி குட்டாவில் வைத்து காவல் துறையினர்கைது செய்தனர். இச்சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் : பள்ளி முதல்வர் அதிரடி கைது
சம்பவம் தொடர்பாக பேசிய காவல் துறையினர், “இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட இருவரும் மகபூப் நகரில் உள்ள டிடி குட்டா அருகே உள்ள லேபர் அட்டாவில் தினசரி கூலிக்கு பெயின்டிங் வேலை செய்து வந்தனர்” என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Sonu Sood Politics | அரசியல் பிரவேசத்தைச் சொல்லி அதிரடி காட்டிய சோனு சூட்.. எந்தக் கட்சியில் இணைகிறார்?