மேலும் அறிய

Ajith whats app status | இதுதான் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்.. சோஷியல் மீடியாவில் ஷேர் செய்த வலிமை பட நடிகர்!

வலிமை படத்தில் அஜித்திற்கு சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜ் ஐயப்பா நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

வலிமை படத்தில் அஜித்திற்கு சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜ் ஐயப்பா நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

கிளிம்ஸ் காட்சிகளுக்கு பிறகு படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வரவில்லை என்றாலும் அஜித் இந்திய அளவில் மேற்கொண்ட பயணம் தொடர்பான புகைப்படங்கள், படப்பிடிப்பு சம்பந்தமான புகைப்படங்களும் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது அஜித் சம்மந்தமான ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் அதுதான் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ். இந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை வலிமை படத்தில் அஜித் சகோதரராக நடிக்கும் ராஜ் ஐயப்பா தனது ட்விட்டர் பககத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில்,  “ ஏழை நடுத்தர வர்க்கம், பணக்காரர் ஆகியவை ஒருவரின் பொருளாதாரம் நிலை. அவரது குணம் கிடையாது. நல்லவர் மற்றும் கெட்டவர் எல்லா தரப்பிலும் இருக்கிறார்கள். ஒருவருடைய பொருளாதார நிலையை வைத்து அவரது குணத்தை முடிவு செய்யாதீர்கள் விழித்துக்கொள்ளுங்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை அஜித்தின் அனுமதியோடு வெளியிட்டுள்ளதாக ராஜ் ஐயப்பா அதில் அவர் தெரிவித்துள்ளார். அமராவதி படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த பானு பிரகாஷின் மகன் ராஜ் ஐயப்பா ஆவார். இவர் முன்னதாக அதர்வாவின் 100 படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அஜித் நடித்துள்ள வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஹூமா குரேஷி, பேர்ல் மானே, யோகி பாபு, கார்த்திகேய கும்மகொண்டா, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு பில்லா 1, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் அஜித்துடன் பணியாற்றிய நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வலிமைப் படத்தின் படப்பிடிப்பு முன்னதாகவே தொடங்கிய நிலையில் அது கொரோனா பரவல் காரணமாக தடைபட்டது. தொடர்ந்து படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போனதாலும், கொரோனா பரவல் சூழ்நிலை கருதியும் படக்குழு படம் குறித்தான எந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை. இதனால் வெறுத்து போன அஜித் ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் வலிமை அப்டேட்டைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில்தான் வலிமை படத்திலிருந்து டீசர் வெளியிடப்பட்டது.  அதன் கூடவே வலிமைப் படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து வலிமைப் படத்திலிருந்து “ நாங்க வேற மாறி” பாடல் வெளியானது.

இந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் வலிமை படத்தில் இருந்து கிளிம்ஸ் காட்சிகளும் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற  அதிகாரப் பூர்வ தகவலும் வெளியானது. படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் அர்ஜூன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார் என்பது தெரிய வந்தது. 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
விஜய் தேவரகொண்டா vs ரிஷிகாந்த்.. பெண்கள் பார்வையில் யார் Green Flag?
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி
" இதில் என்ன தவறு இருக்கிறது ?"கணவர் விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
Embed widget