மேலும் அறிய

Odisha: ஒரே மரத்தில் 3 இளம் பெண்களின் உடல்கள்.. தற்கொலையா? கொலையா? விசாரணை தீவிரம்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பெண்களின் உடல் மரத்தில் தூக்கில் தொங்கியவாறு கைப்பற்றப்பட்டது

ஒடிசா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் நெருங்கிய நண்பர்களான மூன்று பெண்களின் உடல் மரத்தில் தூக்கிட்டு தொங்கியவாறு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசாவின் நபரங்பூர் (Nabarangpur) மாவட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் மூன்று பெண்களின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தத் தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தெரிந்த போலீசார் மரத்தில் இருந்த பெண்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் ஒருவர் கூறுகையில், நபரங்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தோஹ்ரா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் இருவரும், மற்றொரு பெண்ணும் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில் ஒன்றாகக் காட்டிற்குச் சென்றதாக  சென்றுள்ளனர். இரவு 9.30 மணி ஆகியும் சிறுமிகள் இருவரும் வீடு திரும்பாததையடுத்து, அவர்களது குடும்பத்தினர் அவர்களைத் தேடியபோது, அந்த கிராமத்தில் இருந்த ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களை கண்டுள்ளனர்.பின்னர், எங்களிடம் புகார் அளித்தனர்.” என்று கூறினார்.


Odisha: ஒரே மரத்தில் 3 இளம் பெண்களின் உடல்கள்.. தற்கொலையா? கொலையா? விசாரணை தீவிரம்!

“மூவரும் மரக்கிளைகளில் அவர்களுடைய துப்பட்டாவால் கட்டப்பட்டு தொங்கி கொண்டிருந்தனர். மரத்தின் அருகே அவர்களது காலணிகள் கண்டெடுக்கப்பட்டன. பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை என்றாலும், விசாரணை அறிக்கையில், தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மூவரும் 18 முதல் 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள். நாங்கள் இங்குள்ள காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பாக மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளோம்" என்று நபரங்பூர் எஸ்பி ஸ்மித் பர்மர் கூறினார்.

மேலும், போலீசாரின் தகவலின்படி, இறந்த பெண்களில் ஒருவர் தனது கணவரைப் பிரிந்து பெற்றோருடன் தங்கியிருந்தார். மற்ற இருவரும் திருமணமாகாதவர்கள். இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் அடிக்கடி வெளியே சுற்றுவது, ஒன்றாக நேரத்தை செலவிடுவது என்று எப்போதும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று பெண்களும் பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இறப்புக்கான  காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்களின்படி, ​​2020ஆம் ஆண்டில் தற்கொலையால் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று கூறுகிறது.  2020 ஆம் ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் மாதத்தில் சம்பல்பூரில் உள்ள வீர் சுரேந்திர சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவர்கள் குழுவின் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வில், மேற்கு ஒடிசா மாவட்டங்களில் இந்த காலகட்டத்தில் நிகழ்ந்த இறப்புகளில் 38% தற்கொலையால் ஏற்பட்டதாகக் கூறியது. தற்கொலை செய்து கொண்டவர்களில் 40 சதவீதம் பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள், 19 சதவீதம் பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலை தீர்வல்ல..

தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. அதனால், தற்கொலை எண்ணங்கள் தோன்றும்போது, உடனடியாக மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும். பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப, மனரீதியிலான கவுன்சலிங் கொடுக்கப்படும். காய்ச்சல், வயிற்று வலிக்கு மருத்தவரை சந்திப்பது போலத்தான், மனதின் ஆரோக்கியம் குன்றும்போது மனநல மருத்துவரை சந்திப்பதும். அதற்குத் தயக்கமே வேண்டாம் தூக்கியெறியுங்கள். அரசு இலவச மனநல ஆலோசனைக்கு 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தற்கொலை எண்ணத்தைக் கடக்கலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

 

 

Vijay interview : ரசிகர்கள் விருப்பப்பட்டால் தளபதி டூ தலைவன்... நேர்காணலில் அரசியல் முடிச்சை அவிழ்த்த விஜய்!!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

 
Tags:maduraisuicidecrimenellaipolice investication

தலைப்பு செய்திகள்

"நகைக் கொள்ளை வழக்கில் சிக்கிய பெண் காவலர்" பணியிடை நீக்கத்தால் விபரீதம் -இறுதியில் நடந்த சோகம்
"வேலை பார்க்காவிட்டால் டிரான்ஸ்பர் வாங்கிப் போங்க" - மருத்துவர்களை மிரட்டியதாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ மீது புகார் மனு..
" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget