மேலும் அறிய
Advertisement
Watch video: பெண் காவலரிடம் வழிப்பறி.. காவலர் குடியிருப்பிலே மர்மநபர்கள் கைவரிசை..! மதுரையில் துணிகரம்..
மதுரையில் காவலர் குடியிருப்பு பகுதியில் நடந்துசென்ற பெண் காவலரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு
மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் வசிக்ககூடிய வெள்ளியம்மாள் என்ற ஆயுதப்படை பெண் காவலர் இரவு 8 மணி அளவில் பிபி குளம் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் இரவு காய்கறி வாங்கிவிட்டு வீட்டிற்கு தனது குழந்தையுடன் நடந்து வந்துள்ளார்.
மதுரையில் காவலர் குடியிருப்பு பகுதியில் நடந்துசென்ற பெண் காவலரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு !
— arunchinna (@arunreporter92) November 21, 2022
Further reports to follow - @abpnadu@SRajaJourno | @LPRABHAKARANPR3
| @RevathiM92 | @GoodSnake_offl | @ThanniSnake | @Kattaerumbu_bjp pic.twitter.com/6RF1gAYJ40
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென பெண் காவலர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் சங்கலியை பறித்து செல்ல முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது அந்த பெண் சுதாரித்துக் கொண்டு செயினை பிடித்துகொண்ட நிலையில் நான்கரை பவுன் தங்க நகையை பறித்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவலர் குடியிருப்பு பகுதியில் நடந்துசென்ற பெண் காவலரிடம் நகை வழிப்பறி செய்த போது இரு சக்கர வாகனத்தை பெண் காவலர் விரட்டிசெல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர் குடியிருப்பில் பெண் காவலரிடம் நகை பறிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய திருடர்களை தேடி வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அழகன்குளம் அகழ்வாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
விழுப்புரம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion