மேலும் அறிய

Crime : பள்ளி சீருடையில் மது.. ஒயின் குடித்தால் ஜொலிக்கலாம் என நம்பிய மாணவிகள்.. குடிக்கத்தூண்டிய இளைஞர் கைது

சம்பவ இடத்துக்கு விரைந்த ஆம்புலன்ஸ், அங்கு தள்ளாடிக் கொண்டிருந்த இரண்டு மாணவிகளை ஏற்றிச் சென்றுள்ளனர். தொடர்ந்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி சீருடையில் மது அருந்தி விட்டு சாலையில் தள்ளாடிச் சென்ற மாணவிகளை காவல் துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸிடம் ஒப்படைப்பு

கரூர், சர்ச் கார்னர் பகுதியில் பள்ளி மாணவிகள் தள்ளாடியபடி சாலையில் சென்ற நிலையில், இவர்களைக் கவனித்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஆம்புலன்ஸ், அங்கு தள்ளாடிக் கொண்டிருந்த இரண்டு மாணவிகளை ஏற்றிச் சென்றுள்ளனர். தொடர்ந்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து 2 மாணவிகளிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், மொத்தம் 3 பேர் ஒன்றாக சுற்றியதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒயின் குடித்தால் கலர் ஆகலாம் என்று தூண்டல்

இதனையடுத்து மற்றொரு மாணவியையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் 3 மாணவிகளும் கரூரில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்ததும், தேர்வில் தோல்வியடைந்ததால் மறுதேர்வு எழுத பள்ளி சீருடையுடன், மற்றொரு பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு செல்லும்போது 3 பேரும் ஒன்று சேர்ந்ததும் தெரிய வந்தது.

மேலும், ஒயின் குடித்தால் கலராக மாறலாம் என நண்பர்கள் எவரோ சொன்னதை மனதில் கொண்டு ஒயின் வாங்கி 3 மாணவிகளும் குடித்துள்ளதாகவும், ஒயினில் போதை வரும் என்று தெரியாமல் குடித்து விட்டு அவர்கள் தள்ளாடியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து மாணவிகளின் பெற்றோரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து அறிவுரை கூறி அவர்களுடன் அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் மாணவிகளை வற்புறுத்தி தீனா என்ற இளைஞர் மது அருந்தவைத்தது தெரிய வந்த நிலையில், காவல் துறையினர் அந்நபரை கைது செய்துள்ளனர்.

பள்ளிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி

தமிழ்நாட்டில் முன்னதாக மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நேற்று (ஆக.11) முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த உறுதிமொழி ஏற்பு நடந்தது. அண்மையில், போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து, மாவட்டத் தலைநகரங்களில் அமைச்சர்கள் தலைமையில் இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.  தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்

Icecream Ad : ஐஸ்க்ரீம் விளம்பரத்தால் வந்த சர்ச்சை: இனிமே பெண்கள் விளம்பரத்துக்கு வேண்டாம்.. உத்தரவிட்ட அரசு..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D:  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D: 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Embed widget