மேலும் அறிய
Advertisement
மதுரை : கூடுதல் வட்டி ஆசைகாட்டி விரித்த வலை : 15 ஆயிரம் நபர்களிடம் 60 கோடி மோசடி : அடுத்தடுத்து புகார் !
கூடுதல் வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டி 60 கோடி வரை ஏமாற்றியதாக கூறப்படும் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை காளவாசலை அடுத்த பெத்தெல்நகரில் 'ப்ளை வேர்ல்ட் ஷேர்ஸ் ஓபிசி பிரைவேட் லிமிட்டெட்' எனும் பெயரில் டிரேடிங் நிறுவனம் ஒன்று செயல்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தி, மனோஜ் குமார், மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்த சையது பாரூக் ஆகிய மூவரும் இணைந்து இந்த நிறுவனத்தை நடத்திவந்துள்ளனர்.
இந்த டிரேடிங் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 120 நாட்களில் அதிகளவிற்கான வட்டிதொகையும், முதலீட்டு தொகை இரட்டிப்பாகும் எனவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை சமூகவலை தளங்களில் பரப்பினர். இதனை நம்பிய வேலை வாய்ப்பு தேடிவந்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்களும் அந்த டிரேடிங் நிறுவனத்தை தொடர்புகொண்ட பேசியுள்ளனர். அப்போது முழு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஆசையை தூண்டும் வகையிலும் பேசி நம்பவைத்துள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தலா 2ஆயிரத்தி 500ரூபாய் முதல் 10லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். அதே போல் முதலீடு செய்தவர்களை நம்பவைக்கும் வகையில் முதல் இரண்டு மாதங்களுக்கு இரண்டு மடங்கு தொகையை செலுத்திய நிலையில் அதனை நம்பதொடங்கிய முதலீட்டார்களை சென்னையில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துசென்று மீட்டிங், ஆடம்பர உணவு, பார்ட்டி என கொடுத்துள்ளனர்.
இதே போன்று கூட்டத்திற்கு நிறுவனத்தின் அதிகாரிகளான ஆனந்தி, பாருக், மனோஜ் ஆகிய மூவரும் விலையுயர்ந்த ஆடம்பர கார்களிலும், பல லட்சம் மதிப்பிலான உடைகளை அணிந்தும் வருகை தந்து தங்களை பெரும் முதலாளிகள் போல காட்டிக்கொண்டுள்ளனர். இதனை கண்டு முழுவதுமாக ஏமாற்றமடைந்த முதலீட்டாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு கீழ் தலா 100பேர் என கிட்டதட்ட 15000க்கும் மேற்பட்ட முதலீட்டார்களை நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளனர். இதையடுத்து நாள்தோறும் மதுரை, திண்டுக்கல், திருச்சி , கோவை என தமிழகம் முழுவதிலும் உள்ள ஏராளமானோர் முதலீடு செய்துவந்துள்ளனர். முதலீடு செய்த நபர்களுக்கு முதல் இரு மாதங்களுக்கு கூடுதல் வட்டிதொகை இரட்டிப்பாக வழங்கிவந்துள்ளனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக முதலீட்டார்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை வழங்காத நிலையில் கடந்த மே மாதம் முதலாக தொடர்பு கொண்டு நிதி குறித்து கேட்டுள்ளனர். இதனையடுத்து சட்டமன்ற தேர்தல் மற்றும் வருமானவரி செலுத்தும் பணி என்ற காரணங்களை கூறி சமாளித்துவந்துள்ளனர்.
இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்த அனைத்து முதலீட்டார்களும் ஆனந்தி, பாரூக், மனோஜ் ஆகிய 3 பேரையும் தொடர்பு கொண்ட நிலையில் தொகையை தருவதாக கூறி ஏமாற்றிவந்துள்ளனர். இதையடுத்து கடந்த 7-ம் தேதியோடு மூன்று பேரும் தங்களது செல்போன்களை ஆப் செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களது அலுவலகம் மற்றும் வீடுகளுக்கு சென்ற நிலையிலும் மூவரும் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதால் 40-க்கும் மேற்பட்ட முகவர்கள் பொருளாதார குற்றபிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மூன்று பேர் குறித்த தகவல்கள் கிடைக்காத நிலையில் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்த மேலும் 10பேர் தற்போது மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் சிறப்பு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்த இளைஞர்கள், இளம்பெண்களை திரைப்பட பாணியில் வெறும் வார்த்தை ஜாலங்களை முதலீடாக வைத்து 60 கோடியை அபேஸ் செய்து விட்டு தலைமறைவாகியுள்ள மூவரையும் போலிசார் தேடிவருகின்றனர்.
இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் -தெப்பத்தில் சென்று நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion