மேலும் அறிய

தெப்பத்தில் சென்று நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு

காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து மயிலாடுதுறை துலாகட்ட காவிரி ஆற்றில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு தெப்பத்தில் சென்று பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது.

சைவ சமயத்தில் முதல் குருவாகவும், சிவபெருமானின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர். சிவாலயங்களில் சிவலிங்கத்தின் முன் நோக்கி நந்தி பகவான் சிலை அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் தங்குமிடமான கயிலை மலை நுழைவாயிலை பாதுகாக்கும் தெய்வமாகவும் நந்தி பகவான் விளங்கி வருகிறார். நந்தி பகவான் பொதுவாக ஒரு காளையாக சித்தரிக்கப்படுகிறார். இவர் சிவனுடைய வாகனமாகவும் கருதப்படுகிறார். சைவ சித்தாந்த மரபின் படி, நந்திநாத சம்பிரதாயத்தின் எட்டு சீடர்களின் பிரதான குருவாக நந்தி தேவர் கூறப்படுகிறார். 

தெப்பத்தில் சென்று நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு

ஒவ்வொரு மாதமும் சிவாலயங்களில் அமைந்துள்ள நந்தி பெருமானுக்கு பிரதோச நாளில் பிரதோச வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதிலும் சனி பிரதோஷம் மற்றும் செவ்வாய் பிரதோஷம் விசேஷமாக இந்துக்கள் கருதி அந்த இரு பிரதோஷத்தையும், தவறாமல் விரதமிருந்து சிவாலயங்களுக்கு சென்று நந்தி பெருமானுக்கு நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு பிரார்த்தனைகளில் ஈடுபடுவார். குறிப்பாக சனி பிரதோஷத்தில் கலந்துகொள்வது மற்ற பிரதேசங்களில் கலந்து கொள்வதை விட கூடுதல் அருள் கிட்டும் ,வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. இதுபோன்று தமிழ் மாதங்களில் ஒரு சில மாதங்களில் வரும் பிரதோச வழிபாடும் சிறப்பு உடையதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் இன்று அனைத்து சிவாலயங்களிலும், ஆனி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

தெப்பத்தில் சென்று நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு

இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள பிரசித்திபெற்ற காவிரி துலா கட்டத்தில், காவிரி ஆற்றின் நடுவில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு சிவாச்சாரியர்கள் தெப்பத்தில் சென்று ஆனிமாத பிரதேச வழிபாடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தளத்தில் பார்வதிதேவி மயில் உரு கொண்டு சிவபெருமானை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்ற தலமாக இத்தலம் திகழ்ந்து வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க இத்தளத்தில், ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் நந்தி பகவானுக்கு வெகுவிமரிசையாக ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கம்.

தெப்பத்தில் சென்று நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு

அதன்படி ஆனி மாதம் செவ்வாய் கிழமை பிரதோஷ தினமான இன்று கோவில் கொடிமரம் அருகே உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் திரவிய பொடிகளை கொண்டு சிவாச்சாரியார்கள் சிறப்பு  அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து நந்தி தேவர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதுபோல மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் காவிரி ஆற்றின் நடுவே வேறு எங்கும் இல்லாத வகையில் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ள நந்திதேவருக்குசிவாச்சாரியார்கள் பிரதோஷ சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். இந்த இரு பிரதோஷ வழிபாட்டு தலங்களிலும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழக்கமாக மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளும் பக்தர்கள் இன்றி கோவில் ஊழியர்கள் மற்றும் கலந்துகொண்டு எளிமையான முறையில் பிரதோஷ வழிபாடு நடைப்பெற்றது.

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (14-08-2026): வெள்ளிக்கிழமை தனுசு ராசிக்கும் கொட்டப்போகும் லாபம்.. அப்ப உங்க ராசிக்கு? .. பலன்கள் இதோ!
Rasi Palan Today (14-08-2026): வெள்ளிக்கிழமை தனுசு ராசிக்கும் கொட்டப்போகும் லாபம்.. அப்ப உங்க ராசிக்கு? .. பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget