மேலும் அறிய
Advertisement
இரண்டு போக்சோ வழக்குகளில் ஜாமின் கேட்ட சிவசங்கர் பாபாவின் மனு தள்ளுபடி
சிவசங்கர் பாபா மீதான இரண்டு போக்சோ வழக்கில் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் 2 ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் உரிமையாளர் சிவசங்கர் பாபா.
இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது 3 மாணவிகள் கொடுத்த புகார்களின்பேரில் தனித்தனியாக 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் 2 வழக்குகளில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை செங்கல்பட்டு போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தன.
இதையடுத்து இந்த 2 வழக்குகளிலும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அச்சமயம் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் அளிக்கக்கூடாது என போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் 2015, 2018 - 20 ஆகிய காலகட்டத்தில் மாணவிகளிடம் நடத்தப்பட்ட பாலியல் தொந்தரவு செய்த விவகாரம் தொடர்பாக பெறப்பட்ட வாக்குமூலத்தை 300 பக்க குற்றப்பத்திரிகையாக காவல்துறையினர் நீதிபதியிடம் சமர்ப்பித்தனர். பின்னர் இந்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. ஜாமின் குறித்து சிவசங்கர் பாபு மீண்டும் மேல்முறையீடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக புகார் அளித்த மாணவிகளில் ஒருவர் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்து சென்ற பிறகும் 20 நடன நிகழ்ச்சிகளை தன்னுடைய பள்ளியில் நடத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறும் மாணவி ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பாபாவை குறித்தும் அவருடைய பள்ளியை குறித்தும் புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த கருத்துக்களும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.கைதுக்கு பிறகு சிவசங்கர் பாபாவுக்கு இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியதாக அவர் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல, வெறும் புகாரின் அடிப்படையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் எனவும் அவர் வாதிட்டார்.10 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனைக்குரிய சட்டப்பிரிவில் கைது செய்யப்படுபவர்கள் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என விதிகள் உள்ளதாக தெரிவித்த அவர், பாபா கைது செய்யப்பட்டு இன்றுடன் 57 நாட்கள் ஆன பிறகும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் பாபாவுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என வாதம் செய்திருந்தது அடுத்து சிபிசிஐடி போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion