Crime: லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த சினிமா கலைஞர்.. உடந்தையாக இருந்த மனைவி.. சிக்கியது எப்படி?
ராஜஸ்தான் மாநிலத்தில் பாலியல் புகார் கொடுத்த இளம்பெண்ணை, ஒருவர் கொடூரமாக கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: ராஜஸ்தான் மாநிலத்தில் பாலியல் புகார் கொடுத்த இளம்பெண்ணை, ஒருவர் கொடூரமாக கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் புகார்:
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான பெண் சினிமா துறையில் மேக்-அக் கலைஞராக பணியாற்றி வந்தார். இவருக்கு சினிமா துறையில் பணியாற்றும் 48 வயது நபருடன்/பழக்கம் ஏற்பட்டது. 48 வயதான நபருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துள்ளது. இருப்பினும், இவர்கள் இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இருவருக்கும் இடைய கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால், அந்த நபர் மீது பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். 2019ஆம் ஆண்டு அந்த பெண் புகார் அளித்துள்ளார். அதன்பின், இருவருக்கும் இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லை. அவர் தற்போது மனைவியுடன் வாழ்ந்து வரும் அந்த நபர், பாலியல் புகாரை திரும்பப் பெற அந்த பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த பெண், புகாரை திரும்பப் பெற மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
பெண் கொலை:
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி பெண்ணின் சகோதரி காவல் நிலையத்தில் தனது சகோதரி காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். புகாரின்படி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது 43 வயதான நபர் ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து பெண்ணை கொலை செய்து, உடலை சூட்கேஸில் அடைத்து, ஓடையில் வீசியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அந்த நபரும், அவரது மனைவியும், பெண் மேக் அப் கலைஞரை நீரில் மூழ்கடித்து கொலை செய்ததாகவும், பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. இதனை அடுத்து, பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், அப்பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் பால்கர் மாவட்டம் நைகாவ் பகுதியைச் சேர்ந்த நைனா (28) என்பது தெரியவந்தது. அந்த பெண்ணை கொலை செய்தவர் சினிமா துறையில் பணியாற்றும் கிராபிக் டிசைனர் மனோகர் சுக்லா (43) என்பதும் தெரியவந்தது. பின்னர், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல் புகார் அளித்த பெண்ணை, ஒருவர் கொடூரமாக கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Fire Accident: 9 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து - சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்