மேலும் அறிய
Advertisement
Fire Accident: 9 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து - சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்
வேளச்சேரி சென்னை சில்க்ஸ் அருகே புதிதாக கட்டுமான பணிகள் நடந்து வரும் 9 மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டுமான பணிகள் நடந்து வரும் 9 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
வேளச்சேரி சென்னை சில்க்ஸ் அருகே புதிதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஒன்பது மாடி கட்டிடத்தில் எதிர்பாராவிதமாக தீ பற்றி எரிய தொடங்கியது. தீ விபத்தால் அப்பகுதி புகை மண்டலமாக காணப்படுகிறது. இந்த தகவலறிந்து தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகரில் முக்கியமான பகுதிகளில் ஒன்று வேளச்சேரி.
இங்குள்ள பகுதிகளில் முக்கியமான நிறைய கடைகள் உள்ளன. புதிய கட்டிடத்தில் மின்சார கம்பிகள் உரசியதால் விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
விளையாட்டு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion