மயிலாடுதுறையில் தொடர்ந்து பிடிபடும் பாண்டி மதுபானங்கள் - தடுக்க என்ன செய்ய போகிறது காவல்துறை?
மயிலாடுதுறை அருகே போலீசாரின் வாகன சோதனையில் காரில் கடத்தி வரப்பட்ட பாண்டி சாரயம், மதுபாட்டில்கள் காருடன் பறிமுதல் செய்து கடத்தி வந்த கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மிக அருகில் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டம் அமைந்துள்ளது. காரைக்காலில் மதுபானங்களின் விலை குறைவு என்பதாலும், அங்கு எளிதில் சாராயம் கிடைப்பதாலும், அங்கிருந்து மதுபானம் மற்றும் சாராயங்கள் கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை நடைபெறுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் மேற்கொண்டாலும், அவர்களின் கண்களில் மண்ணைத்துவம் விதமாக சாராயம் மட்டும் மதுபான கடத்தலை தடுத்து நிறுத்த முடியாத வண்ணம் கடத்தல் காரர்கள் தொடர்ந்து கடத்தல் ஈடுபடுகின்றன.
இந்நிலையில் காரைக்காலில் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் காரில் கடத்தி வருவதாக மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி நீலகண்டன் தலைமையில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் நாகரெத்தினம், காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர் அருள், முதன்மை காவலர்கள் மனோகர், மகேஷ், பாலகுரு ஆகியோர் செம்பனார்கோவில் காவல் சரகம் ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனை செய்தனர். சோதனையில் 672 பாண்டி மதுபாட்டில்கள், 220 லிட்டர் கொண்ட 300 குவாட்டர் பாட்டில் சாராயம், 11 சாராய மூட்டைகள், 230 சாராய பாக்கெட்டுகள், இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 5 லட்சம் மதிப்பிலான காரையும், 1 லட்சம் மதிப்பிலான 672 குவாட்டர் மதுபாட்டில்கள் மற்றும் 220 லிட்டர் பாண்டி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
OPS Meets Rajinikanth: திடீரென நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் - காரணம் என்ன?
சாராயம் மற்றும்’ மதுபாட்டில்களை கடத்தி வந்த மயிலாடுதுறை அருகே பாண்டூரை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேஷ் என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் காரைக்காலில் இருந்து சீர்காழி பகுதிக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. யாருக்காக கடத்தலில் ஈடுபட்டார்? சாராய வியாபாரி யார்? என்று காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொடர்ந்து இதுபோன்ற இச்சம்பவம் மாவட்டத்தில் நடைபெறுவதை காவல்துறையினர் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.