OPS Meets Rajinikanth: திடீரென நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் - காரணம் என்ன?
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் அவரை மரியாதை நிமித்தமாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் ஓ பன்னீர்செல்வம் சென்று சந்தித்து பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் அவரை மரியாதை நிமித்தமாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார்.சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் ஓ பன்னீர்செல்வம் சென்று சந்தித்து பேசியுள்ளார்.
இருவரும் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெய்லர் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. ஜெய்லர் வெளியாவதற்கு முன்பே அவர், இமயமலைக்கு தனது ஆன்மிகப் பயணத்தை தொடங்கினார். ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை எனத் தொடர்ந்து பயணித்தவர் உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்தார். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான நிலையில், 600 கோடிகள் வசூலைக் கடந்து இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. மேலும், ஓ.டி.டி-யில் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது.
ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸின் நிறுவனர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தி, பூங்கொத்து கொடுத்தார். அதோடு, அவருக்கு ஜெயிலர் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை கொண்டாடும்விதத்தில் ரஜினிகாந்துக்கு ரூ.1.24 கோடி மதிப்புள்ள BMW x7 ரக சொகுசு காரை அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
யோகி ஆதித்யநாத்தை ரஜினிகாந்த் சந்தித்தபோது, ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக அவரது கால்களை தொட்டுக் வணங்கினார். இந்நிலையில் 72 வயது மிக்க ரஜினிகாந்த் தன்னை விட 21 வயது சிறியவரான யோகி ஆதித்யநாத் கால்களில் விழுந்தது இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்தது மரியாதை மற்றும் நட்பு ரீதியிலான சந்திப்பு என்று அவர் குறிப்பிட்டிருந்தார். யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததற்கு அதிருப்தி எழுந்த நிலையில், ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருதார். ’சந்நியாசி ஆகட்டும், யோகிகள் ஆகட்டும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். நான் அதை தான் செய்தேன்" என்று விளக்கம் தெரிவித்திருந்தார். அப்படியிருக்க, இப்போது ஓ.பன்னீர்செல்வம் ரஜினிகாந்தை சந்தித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து தமிழகம் முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ள நிலையில் இன்று ரஜினிகாந்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்திற்கு அளித்த பரிசு - சிறப்பு என்ன
இந்தக் காரின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் துப்பாக்கி குண்டு, வெடி குண்டு போன்றவை ஊடுருவி உள்ளே செல்லாத வகையில் புல்லட்ப்ரூஃப் வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய VR9 பாதுகாப்பு சான்றிதழை இக்கார் பெற்றுள்ளது.இதன் டயர்களும் அதிக பாதுகாப்பு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 20 இன்ச் மிச்செலின் PAX புல்லட் ப்ரூப் டயர் பொருத்தப்பட்டுள்ளது. எனவே டயர்கள் பஞ்சர் ஆகாது. டயரில் காற்றே இல்லாமல் கூட இந்தக் கார்கள் 80KMPH வேகத்தில் செல்லும். கூடுதல் வசதிகளாக ஏர் சப்ளை சிஸ்டம், தீ விபத்து ஏற்பட்டால் தானாக அல்லது மேனுவல் முறையிலும் தீயை அணைக்கும் வசதி, பிளாஷ் லைட், ரேடியோ வசதி என பல அம்சங்கள் இந்தக் காரில் உள்ளது. பல சோதனைகளுக்குப் பிறகு BMW நிறுவனம் இந்த X7 காரை உருவாக்கியுள்ளது. மேலும் இந்தக் கார் உலகின் முக்கிய பிரபலங்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.