மேலும் அறிய

புதுச்சேரி: தவளக்குப்பம் அருகே முன்விரோதத்தில் விவசாயி கழுத்தை அறுத்து கொலை

தவளக்குப்பம் அருகே முன்விரோதத்தில் விவசாயி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு .

புதுச்சேரி தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையம் உடையார் தெருவை சேர்ந்தவர் அனந்தராமன் என்கிற முருகன் (51), விவசாயியான இவருக்கு தனபாக்கியம் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். அனந்தராமனுக்கு அருகில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கரும்பு பயிர் செய்யப்பட்டு வருகிறது. அனந்தராமன் தினமும் காலையில் விவசாய நிலத்துக்கு சென்று பணிகளை கவனிப்பார். மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு செல்லும் அவர், மீண்டும் விவசாய நிலத்துக்கு வந்துவிட்டு மாலையில் வீடு திரும்புவார். அதன்படி நேற்று காலையில் விவசாய நிலத்துக்கு சென்ற அனந்தராமன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். பிறகு மதியம் 3 மணியளவில் மீண்டும் விவசாய நிலத்துக்கு சென்று, வேலைகளை கவனித்தார்.

அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அனந்தராமனிடம் தகராறு செய்து அனந்தராமனை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் வெட்டுக்காயம் அடைந்த அனந்தராமன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். அனந்தராமன் இறந்ததை உறுதி செய்து கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். 

புதுச்சேரி: தவளக்குப்பம் அருகே முன்விரோதத்தில் விவசாயி கழுத்தை அறுத்து கொலை

இந்த நிலையில் அனந்தராமன் பிணமாக கிடப்பதை பார்த்த இருளர்குடியிருப்பு மக்கள் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தெரிவித்தனர். உடனே போலீஸ் சூப்பிரண்டுகள் லோகேஸ்வரன், ஜிந்தா கோதண்டராமன், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அனந்தராமன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அனந்தராமன் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் மார்பில் 3 கத்திக்குத்து காயங்கள் இருந்தன. உடலை பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்சுக்காக போலீசார் காத்திருந்தனர்.

இதற்கிடையில் அனந்தராமன் படுகொலை செய்யப்பட்ட தகவல் அந்த பகுதியில் பரவியது. இதை அறிந்த அவரது உறவினர்கள், பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள், இந்த பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகம் உள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என்று போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் முன்விரோதம் காரணமாக சிறுவர்கள் கஞ்சா புகைத்துக்கொண்டு அனந்தராமனை கொலை செய்துள்ளனர். அவர்களை கைது செய்யும் வரை உடலை எடுத்துச்செல்ல விடமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி: தவளக்குப்பம் அருகே முன்விரோதத்தில் விவசாயி கழுத்தை அறுத்து கொலை

 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன்பிறகு அனந்தராமன் உடலை ஆம்புலன்சில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த படுகொலை தொடர்பாக தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனந்தராமனுக்கும், அவரது எதிர்வீட்டை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று காலை இருகுடும்பத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் அனந்தராமன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Results LIVE: 2ஆம் இடத்திற்கு போட்டி போடும் திமுக, அதிமுக.! முதல் இடத்தில் கில்லியாக தவெக
2ஆம் இடத்திற்கு போட்டி போடும் திமுக, அதிமுக.! முதல் இடத்தில் கில்லியாக தவெக
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
IAS Transfer: உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
Embed widget