தலைமறைவாக இருக்கும் ஆபாச யூ ட்யூபர் மதனின் மனைவி கிருத்திகாவை ஜூன் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு
தலைமறைவாக உள்ள ஆபாச யூ டியூபர் மதனின் மனைவி கிருத்திகாவை ஜூன் 30ஆம் தேதி வரை காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தலைமறைவாக உள்ள யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பப்ஜி விளையாட்டை மத்திய அரசு தடை செய்திருந்தாலும் விபிஎன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எப்படி பப்ஜி விளையாடுவது என்று லைவ் ஸ்ட்ரீமிங்கில் பணத்தை அள்ளிக்குவித்து வந்தவர் மதன், லைவ் ஸ்ட்ரீமிங்கின் போது சிறுவர், சிறுமிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாக புகார் எழுந்தவும். இன்ஸ்டாகிராமில் மதனை பின்பற்றும் சிறுமிகளையும் அவர் ஆபாசமாக பேசுவதாகவும் மதன் மீது புகார் எழுந்தது. சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதியில் இருந்து 160க்கும் அதிமான புகார்கள் மதன் மீது குவியவே அவரை நேரில் ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் புகார் அடிப்படையில் துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான தனிப்படை போலீசார், மதனை தீவிரமாக தேடி வருகின்றனர். முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வரும் போலீசார் மதன் சேலத்தில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கேயும் அவரை தேடினர். அங்கும் மதன் சிக்காததால் மனைவி கிருத்திகா மற்றும் மதனின் தந்தை மாணிக்கம் ஆகியோரிடம் இன்று காலை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மதன் நடத்தும் யூட்டியூப் சேனலின் அட்மினாக அவரது மனைவி கிருத்திகா இருப்பது தெரியவந்ததால் போலீசார் விசாரணையில் தெரியவந்ததால் கிருத்திகாவை கைது செய்த காவல் துறையினர், அவரை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். கிருத்திகாவிடம் விசாரணை நடத்திய நீதிபதிகள் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை கிருத்திகாவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்