மேலும் அறிய

அரசு பேருந்தில் திடீரென கழன்று ஓடிய 2 சக்கரங்கள்! நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்... சீர்காழியில் திக்..திக்..

சீர்காழி அருகே சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்தின் பின்புற சக்கரங்கள் திடீரென கழன்று ஓடிய நிலையில், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இன்று மதியம் அரசு பேருந்து ஒன்று சாலையில் சென்ற போது அதன் பின்புற சக்கரங்கள் கழன்று தனியாக ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும், அதிர்ஷ்டவசத்தாலும் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.

சாலையில் கழன்றோடிய பேருந்து சக்கரம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து ஒன்று, இன்று மதியம் 12:30 மணியளவில் சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கிப் புறப்பட்டது. இந்தப் பேருந்தை செல்லப்பாண்டி என்பவர் ஓட்டிச் சென்றார். பேருந்தில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் மயிலாடுதுறை நோக்கிச் செல்லும் ஏராளமான பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர்.

பேருந்து சீர்காழி அருகே உள்ள சேந்தங்குடி ரயில்வே மேம்பாலத்தில் ஏறி இறங்கியபோது இந்த விபத்து நிகழ்ந்தது. மேம்பாலத்தின் இறக்கத்தில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பேருந்தின் வலதுபுறப் பின்புற அச்சில் (Axle) இருந்த பேரிங் திடீரென உடைந்தது. இதனால், பேருந்தின் பின்புறம் இருந்த இரண்டு சக்கரங்களும் அச்சுடன் கழன்று தனியாக வெளியே வந்து சாலையில் ஓடின.

பயணிகளின் அலறல் சத்தம்

சக்கரங்கள் கழன்றவுடன் பேருந்தின் ஒரு பகுதி தரையில் உரசி பயங்கரமான சத்தத்தை எழுப்பியது. இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஒருபுறமாகச் சாயத் தொடங்கியது. உள்ளே இருந்த பயணிகள் மற்றும் சாலையில் சென்ற பொதுமக்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அச்சத்தில் அலறினர். சக்கரங்கள் கழன்றதை உணர்ந்த ஓட்டுநர் செல்லப்பாண்டி, உடனடியாகப் பேருந்தை மிகக் கவனமாகச் சாலையோரம் நிறுத்தினார். இதனால் பேருந்து கவிழாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.

பேருந்து நின்றவுடன் உள்ளே இருந்த பயணிகள் பதற்றத்துடன் கீழே குதித்தனர். அதிர்ஷ்டவசமாகப் பேருந்து மெதுவான வேகத்தில் சென்றதாலும், ஓட்டுநர் உடனடியாக சுதாரித்துக் கொண்டதாலும் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்துக்குள்ளான பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் பின்னர் மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பராமரிப்புப் பணி: பொதுமக்கள் அதிருப்தி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து கழக மெக்கானிக்குகள், பழுதான பேருந்தைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் அரசு பேருந்துகளின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "அரசு பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதற்குச் சான்றாகவே இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. ஓடும் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல. இது முற்றிலும் போக்குவரத்து கழகத்தின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. பல உயிர்கள் அடங்கிய ஒரு வாகனத்தை இவ்வளவு அலட்சியமாகக் கையாள்வது கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்தனர்.

எழும் கோரிக்கைகள்

அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் போதிய அளவில் மெக்கானிக்குகள் இல்லாததே இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

*கூடுதல் பணியாளர்கள்: அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பி, கூடுதல் மெக்கானிக்குகளை நியமிக்க வேண்டும்.

*காலை நேரச் சோதனை: ஒவ்வொரு முறையும் பேருந்து பணிமனையிலிருந்து வெளியேறும் முன்பாக, அதன் பிரேக், சக்கரம், இன்ஜின் உள்ளிட்ட அனைத்து பாகங்களையும் மெக்கானிக்குகள் முழுமையாகச் சோதனை செய்த பின்னரே போக்குவரத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

*பழைய பேருந்துகள் மாற்றம்: காலாவதியான மற்றும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள பேருந்துகளைச் சாலைகளில் இயக்குவதைத் தவிர்த்து, புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

சீர்காழி அருகே நடந்த இந்த விபத்து, அரசு பேருந்துகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பெரும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாகவே அரசு விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதங்கள் வேறாகலாம்.. மனம் ஒன்றுதான்! கோவில் டூ தர்கா: சீர்வரிசை தட்டுகளுடன் வந்த மீனவர்கள்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கந்தூரி விழா...
மதங்கள் வேறாகலாம்.. மனம் ஒன்றுதான்! கோவில் டூ தர்கா: சீர்வரிசை தட்டுகளுடன் வந்த மீனவர்கள்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கந்தூரி விழா...
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தானும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற பெரும் கனவில் இருந்தார் - வி.ஜி.கே. செந்தில்நாதன்
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தானும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற பெரும் கனவில் இருந்தார் - வி.ஜி.கே. செந்தில்நாதன்
மயிலாடுதுறை: சீர்காழி, பூம்புகார் தொகுதிகளில் முதல் நாள் வேட்புமனு தாக்கல்! யார் யார் தெரியுமா? பரபரப்பு தகவல்!
மயிலாடுதுறை: சீர்காழி, பூம்புகார் தொகுதிகளில் முதல் நாள் வேட்புமனு தாக்கல்! யார் யார் தெரியுமா? பரபரப்பு தகவல்!
நிஜ 'சார்பட்டா' நாயகர்கள்: மயிலாடுதுறையிலிருந்து சத்தீஸ்கருக்குப் புறப்பட்ட 7 இளம் மல்லர்கம்ப வீரர்கள்!
நிஜ 'சார்பட்டா' நாயகர்கள்: மயிலாடுதுறையிலிருந்து சத்தீஸ்கருக்குப் புறப்பட்ட 7 இளம் மல்லர்கம்ப வீரர்கள்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
Aadhav Arjuna Net Worth: 442 கோடி சொத்து, 490 சவரன் தங்கம், கார்கள்.. ஆச்சர்யபடுத்தும் ஆதவ் அர்ஜூனா சொத்து விவரம் இதோ!
Aadhav Arjuna Net Worth: 442 கோடி சொத்து, 490 சவரன் தங்கம், கார்கள்.. ஆச்சர்யபடுத்தும் ஆதவ் அர்ஜூனா சொத்து விவரம் இதோ!
சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் திமுகவின் தேர்தல் அறிக்கைதான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் திமுகவின் தேர்தல் அறிக்கைதான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
TVK Bussy Anand Assets: தவெக விஜயின் தளபதி; புஸ்ஸி ஆனந்த் எனும் முனுசாமி சொத்து மதிப்பு- இத்தனை கோடி ரூபாயா?
TVK Bussy Anand Assets: தவெக விஜயின் தளபதி; புஸ்ஸி ஆனந்த் எனும் முனுசாமி சொத்து மதிப்பு- இத்தனை கோடி ரூபாயா?
ஏதர் எடுக்கப்போகும் புது அவதாரம்! கம்மி விலையில் கலக்க வரும் Ather EL01 இ ஸ்கூட்டர்!
ஏதர் எடுக்கப்போகும் புது அவதாரம்! கம்மி விலையில் கலக்க வரும் Ather EL01 இ ஸ்கூட்டர்!
"ஆட்சி அமைக்கவே முடியாது!" - இண்டியா கூட்டணிக்கு 'முற்றுப்புள்ளி' ... புதுச்சேரி அரசியலை அலறவிட்ட அண்ணாமலை!
Cuba Crisis: இருளில் தத்தளிக்கும் கியூபா.. கைகொடுத்த புதின்.. கச்சா எண்ணெயுடன் வந்திறங்கிய ரஷ்ய கப்பல்
Cuba Crisis: இருளில் தத்தளிக்கும் கியூபா.. கைகொடுத்த புதின்.. கச்சா எண்ணெயுடன் வந்திறங்கிய ரஷ்ய கப்பல்
Kerala Election 2026: மகளிருக்கு மாதாமாதம் ரூ.2500, 3ஆயிரம் ஓய்வூதியம்- இலவச வாக்குறுதிகளை அள்ளிவீசிய பாஜக!
Kerala Election 2026: மகளிருக்கு மாதாமாதம் ரூ.2500, 3ஆயிரம் ஓய்வூதியம்- இலவச வாக்குறுதிகளை அள்ளிவீசிய பாஜக!
Embed widget