மேலும் அறிய

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட மூதாட்டி: குண்டர் சட்டத்தில் சிறை! மயிலாடுதுறை அதிரடி நடவடிக்கை, காரணம் என்ன?

மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம் பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 60 வயது மூதாட்டி ராஜகுமாரி என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

ரகசிய தகவலும் போலீஸ் வேட்டையும்

மயிலாடுதுறை மாவட்டம், புதுப்பட்டினம் காவல் சரகத்திற்குட்பட்ட ஆர்பாக்கம் பகுதியில், பாண்டிச்சேரி மதுபானங்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்கப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், கடந்த 01.02.2026 அன்று சீர்காழி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயா தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.

சிக்கிய மூதாட்டி - பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள்

காவல்துறையினர் ஆர்பாக்கம், பள்ளிக்கூடத்தெரு பகுதியில் சோதனை நடத்தியபோது, அங்கு வசிக்கும் குணசேகரன் என்பவரது மனைவி ராஜகுமாரி (60), என்பவர் தனது வீட்டின் அருகே ரகசியமாக மது விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் மறைமுகமாக விற்பனை செய்யும் இடத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 110 லிட்டர் பாண்டிச்சேரி சாராயம், 180 மி.லி அளவு கொண்ட மதுபானங்கள் அடங்கிய 531 பாட்டில்களை (95 லிட்டர்), சட்டவிரோத மதுபானங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது பிடிப்பட்டது. அதனை அடுத்து ராஜகுமாரியை உடனடியாகக் கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

கைது செய்யப்பட்ட ராஜகுமாரி என்பவர் மீது ஏற்கனவே பல்வேறு மதுவிலக்கு குற்ற வழக்குகள் இருப்பதும், அவர் தொடர்ந்து இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரைத் தடுப்புக் காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.

காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கடந்த 20.02.2026 அன்று ராஜகுமாரியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின்படி, 21.02.2026 நேற்று சீர்காழி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயா மற்றும் காவல் ஆளிநர்கள் ராஜகுமாரியைத் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

காவல் கண்காணிப்பாளரின் கடும் எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இது குறித்துத் தெரிவிக்கையில், பொதுமக்களுக்கும் பொது அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் 

அவர் வெளியிட்ட எச்சரிக்கையில், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் தீவிரமாகத் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள், ரௌடிசம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கஞ்சா விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், நடப்பு 2026-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த ஒருவர் மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 3 நபர்கள் என மொத்தம் 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 50 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி நடவடிக்கை மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
கோடியக்கரை சரணாலயத்திற்கு வரப்போகும் புதிய மாற்றங்கள்: நாகை ஆட்சியரின் ‘ஸ்பாட் விசிட்’ பின்னணி!
கோடியக்கரை சரணாலயத்திற்கு வரப்போகும் புதிய மாற்றங்கள்: நாகை ஆட்சியரின் ‘ஸ்பாட் விசிட்’ பின்னணி!
வலைக்குள் சிக்கிய விசித்திர உருவம்... கடல் நீரை ஊற்றிப் பார்த்த மீனவர்களுக்குக் காத்திருந்த மெய்சிலிர்க்கும் காட்சி!
வலைக்குள் சிக்கிய விசித்திர உருவம்... கடல் நீரை ஊற்றிப் பார்த்த மீனவர்களுக்குக் காத்திருந்த மெய்சிலிர்க்கும் காட்சி!
உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்ல பேச, எழுதத் தெரியுமா? அப்போ இந்த ரூ.10,000 அவங்களுக்குத்தான்!
உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்ல பேச, எழுதத் தெரியுமா? அப்போ இந்த ரூ.10,000 அவங்களுக்குத்தான்!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget