Crime: பாவமன்னிப்பு பெயரில் பாவத்தை வாங்கிய பாதிரியார்...! தலைமறைவாக இருந்த பெனடிக்ட் கைது..!
கன்னியாகுமரி அருகே பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி அருகே பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளை அருகேயுள்ள பாத்திமா நகரில் பெனடிக்ட் ஆன்றோ என்பவர் வசித்து வருகிறார். இவர் அழகிய மண்டபம் அருகேயுள்ள பிலாங்காலை பகுதியின் தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். இவர் தேவாலயத்துக்கு வந்த சில பெண்களிடம் பேசி அவரை தன் வலையில் வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
அவர்களின் தொலைபேசி எண்களை வாங்கி முதலில் மெசெஜ் செய்யும் பெனடிக்ட் ஆன்றோ தொடர்ந்து வீடியோ காலிலும் பேச தொடங்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாக பெண்களை நிர்வாணமாக பேச வைத்து அதனை வீடியோ கால் வழியாக பதிவு செய்ததாக சொல்லப்படுகிறது. அதனை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதற்கிடையில் பிலாவிளை பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் அவர் செய்த செயல்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக இருவருக்குமிடையே பிரச்சினை எழுந்தது. இதனால் பெனடிக்ட் கொல்லங்கோடு காவல்துறையில் புகாரளித்தார். இதனடிப்படையில் சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
அதேசமயம் அந்த மாணவரின் பெற்றோர் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் பாதிரியார் பெனடிக்ட் ஏராளமான பெண்களிடம் ஆபாச உரையாடல்கள், வீடியோக்கள் ஒப்படைத்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான விசாரணை நடந்த நிலையில் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் பாலியல் ரீதியாக தன்னிடம் மட்டுமல்ல பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தார்.
இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் பெனடிக்ட் ஆன்றோ வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசார் பாதிரியாரின் லேப்டாப்பை ஆய்வு செய்த போது அதில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள், உரையாடல்கள் தொடர்பானவை கிடைத்தாக கூறப்படுகிறது. பாதிரியாரை பிடிக்க ஏடிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இன்று வெளியூர் தப்பிச்செல்ல முயன்ற போது நாகர்கோவில் பால்பண்ணை அருகே கைது செய்யப்பட்டார்.