கணவரை கண்டிக்கச் சொன்ன மனைவி... வாக்குவாதத்தில் தற்கொலை செய்த பெண்... மாட்டிய போலீஸ்காரர்!
விக்னேஸ்வரியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது தற்கொலைக்கு போலீஸ்காரர் முகிலனே காரணம் எனவும் உறவினர்கள் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சென்னையில் இளம்பெண் தற்கொலை வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸ்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வந்தவர் விக்னேஸ்வரி வயது 27. இவர், பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் சின்னதாக ஹோட்டல் நடத்தி வந்தார். இவரது கணவர் கபில்தேவ். இவர்களுக்கு 11 வயதில் பெண் குழந்தையும், 5 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
ஹோட்டல் நடத்தி வந்தபோது, அங்கு சாப்பிட வந்த முள்ளிமா நகரைச் சேர்ந்த, நீலங்கரை குற்றப்பிரிவு போலீஸார் முகிலனுக்கும் (42) பழக்கம் விக்னேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஓட்டல் பதார்த்தங்களை கேட்டு வந்தவர், பின்னர் எதார்த்தமாக விக்னேஸ்வரியுடன் நெருங்கினார். இதன் காரணமாக கணவருக்கும்-விக்னேஸ்வரிக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பிரிந்து சென்றனர். இருவருக்குமிடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த ஓராண்டாக முகிலனும், விக்னேஸ்வரி ஒன்றாக வசித்து வந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி விக்னேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விக்கேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விக்னேஸ்வரியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது தற்கொலைக்கு போலீஸ்காரர் முகிலனே காரணம் எனவும் உறவினர்கள் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, முகிலனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் பல்வேறு தகவல்களை வாக்குமூலத்தில் கூறினார். விசாரணையில், “தனது கணவர் கபில்தேவ் தகராறு செய்து வருவதாகவும், இதற்கு எதாவது செய்ய வேண்டும் என்று கூறிய அவர், நீங்கள் போலீசாக இருந்து ஒன்று செய்யமுடியாமல் இருக்கிறீர்கள், தட்டிக்கேட்கமாட்டீர்களா? என்று சண்டை போட்டார். அதற்கு, விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், அதில் தீர்ப்பு வந்தவுடன் சட்டரீதியாக கபில்தேவ் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினேன். ஆனால், அவர் என் பேச்சை கேட்காமல் தொடர்ந்து சண்டையிட்டு வந்தார். இதனிடையே, கழிவறைக்கு சென்ற நான், மீண்டும் வந்து பார்த்தபோது, மின்விசிறியில் புடவையில் கட்டி அவர் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நான், அவரை மீட்க முயற்சித்தேன். ஆனால், அதற்குள் அவரது உயிரிழந்துவிட்டார்” என்றார்.
இதனைத்தொடர்ந்து, முகிலன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தாய் உயிரிழந்த நிலையில், தந்தையும் கூட இல்லாத காரணத்தால் இரண்டு குழந்தைகளின் நிலைமை பார்த்து அப்பகுதி மக்கள் வேதனை அடைந்தனர்.
மாமியருடன் கள்ளத்தொடர்பு....பல முறை மிரட்டியும் அடங்காதவரின் கதையை முடித்த மருமகன்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்