மாமியருடன் கள்ளத்தொடர்பு....பல முறை மிரட்டியும் அடங்காதவரின் கதையை முடித்த மருமகன்!
மாமியார் உடனான கள்ளக்காதலை தவிர்க்குமாறு கோபியை கண்டித்துள்ளார். மேலும், மாமியாரை பார்க்க வீட்டுக்கு வர வேண்டாம் என்றும், மீறி வந்தால் கொலை செய்து விடுவேன் என்றும் பலமுறை மிரட்டியுள்ளார்.
மாமியாருடன் கள்ளத்தொடர்பில் இருந்தவரை, மருமகன் அடித்து கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை பாடி கைலாசநாதர் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபி வயது 34. திருமணம் ஆகாத இவர், கார், பைக்குகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். பாடியைச் சேர்ந்த இவரின் நண்பர், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பின்பு, நண்பரின் மனைவியுடன் கோபிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் முதலில் சகஜமாக பழகி வந்த நிலையில், நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து, இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக சுற்றிதிரிந்து வந்ததாகவும் தெரிகிறது. ஒருநாள் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம், அந்தப் பெண்ணின் மருமகன் நந்தகுமாருக்கு தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த நந்தகுமார், மாமியார் உடனான கள்ளக்காதலை தவிர்க்குமாறு கோபியை கண்டித்துள்ளார். மேலும், மாமியாரை பார்க்க வீட்டுக்கு வர வேண்டாம் என்றும், மீறி வந்தால் கொலை செய்து விடுவேன் என்றும் கோபியை நந்தகுமார் பலமுறை மிரட்டியுள்ளார். ஆனால், கோபி, அந்தப்பெண்ணும் தங்களின் கள்ளக்காதலை கைவிடவில்லை.
இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி கோபி தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். இதனை அறிந்து கொண்ட நந்தகுமார், கோபத்துடன் அங்கு சென்றார். அங்கு கோபிக்கும், நந்தகுமாருக்கும் முதலில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றி, கோபியை நந்தகுமார் சரமாரியாக தாக்கி அடித்து உடைத்துள்ளார். இதில், பலத்த ரத்த காயம் அடைந்த கோபியை அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக கோபியின் தாயார் கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் நந்தகுமாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாமியாருடனான கள்ளக்காதலை விட நபரை மருமகன் அடித்துக்கொலை செய்த சம்பவம் பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்